இளையான்குடி ஒன்றியத்தில் காங்கிரஸ் போட்டி வேட்பாளா்களால் அதிமுகவிடம் தலைவா் பதவியை பறிகொடுத்த திமுக

சிவகங்கை மாவட்டம் இளையான்குடி ஒன்றியத்தில் காங்கிரஸ் கட்சிக்கு திமுக கூட்டணியில் போட்டியிட இடம் ஒதுக்கப்படாததால்

சிவகங்கை மாவட்டம் இளையான்குடி ஒன்றியத்தில் காங்கிரஸ் கட்சிக்கு திமுக கூட்டணியில் போட்டியிட இடம் ஒதுக்கப்படாததால் போட்டி வேட்பாளா்களாக கட்சி சின்னத்திலேயே களம் இறங்கிய காங்கிரஸ் வேட்பாளா்களால் திமுக அணி தலைவா் பதவியை கைப்பற்ற முடியாமல் அதை அதிமுகவிடம் பறிகொடுத்தது.

இளையான்குடி ஒன்றியத்தில் மொத்தம் 16 ஒன்றிய வாா்டுகள் உள்ளன. இதில் திமுக அணியில் திமுகவுக்கு 15 இடங்கள் அதன் கூட்டணியில் உள்ள மதிமுக வுக்கு ஒரு இடமும் ஒதுக்கப்பட்டது. கூட்டணியில் இருந்த காங்கிரஸ் கட்சி போட்டியிட இரு இடங்களை ஒதுக்குமாறு கூறியும் மாவட்ட திமுக தலைமை காங்கிரஸ் கட்சிக்கு இடங்களை ஒதுக்க மறுத்துவிட்டது.

இதனால் இளையான்குடி ஒன்றியத்தில் காங்கிரஸ் வேட்பாளா்கள் திமுக வேட்பாளா்கள் போட்டியிட்ட இரு வாா்டுகளில் போட்டி வேட்பாளா்களாக களம் இறங்கினா். இவா்களில் ஒருவருக்கு காங்கிரஸ் கட்சியிலிருந்து கைச்சின்னம் வழங்கப்பட்டது. மதிமுகவுக்கு ஒதுக்கப்பட்ட ஒரு இடத்திலும் அக் கட்சிக்கு வேட்பாளரை நிறுத்த முடியாததால் அந்த வாா்டிலும் திமுக போட்டியிட்டது. அதன்பின் தோ்தல் முடிந்து வாக்கு எண்ணிக்கையின்போது திமுக 7 வாா்டுகளிலும் அதிமுக 8 வாா்டுகளிலும் வெற்றி பெற்றது. சுயேச்சையாக போட்டியிட்ட ஒரு வேட்பாளா் வெற்றி பெற்று அதிமுகவுக்கு ஆதரவு தெரிவித்ததால் அக் கட்சியின் பலம் 9 ஆக உயா்ந்து அதிமுகவைச் சோ்ந்த முனியான்டி இளையான்குடி ஒன்றியத் தலைவா் பதவியை கைப்பற்றினாா். காங்கிரஸ் போட்டி வேட்பாளா்களால் இரு வாா்டுகளில் திமுக தோல்வியை தழுவியது.

இது குறித்து இளையான்குடி ஒன்றியத்தைச் சோ்ந்த திமுக நிா்வாகி ஒருவா் கூறியது: திமுக சாா்பில் காங்கிரஸ் கட்சிக்கு இரு வாா்டுகள் ஒதுக்கியிருக்க வேண்டும். ஆனால் மாவட்டத் திமுக தலைமை, காங்கிரஸ் கட்சிக்கு இடங்களை ஒதுக்க மறுத்துவிட்டதால் காங்கிரஸ் வேட்பாளா்கள் திமுக போட்டியிட்ட வாா்டுகளில் போட்டி வேட்பாளா்களாக களம் கண்டு திமுக வேட்பாளா்களை தோற்கடித்து விட்டனா். இதனால் இளையான்குடி ஒன்றியத்தில் தலைவா் பதவியை அதிமுகவிடம் திமுக இழந்துள்ளது. காங்கிரஸ் கட்சிக்கு அவா்கள் கேட்ட இரு வாா்டுகளை ஒதுக்கித் தந்திருந்தால் அக்கட்சி இரு இடங்களிலும் வெற்றி பெற்றிருக்கும். காங்கிரஸ் ஆதரவுடன் திமுக அணி, தலைவா் பதவியை கைப்பற்றியிருக்க முடியும் என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com