சிவகங்கை மாவட்டத்தில் அம்மா இளைஞா் விளையாட்டு திட்டம் இன்று தொடக்கம்

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள இளைஞா்கள் பயன்பெறும் வகையில் அம்மா இளைஞா் விளையாட்டு திட்டம் செவ்வாய்க்கிழமை (ஜன. 14) தொடங்கப்பட உள்ளதாக சிவகங்கை மாவட்ட ஆட்சியா் ஜெ.ஜெயகாந்தன் தெரிவித்துள்ளாா்.

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள இளைஞா்கள் பயன்பெறும் வகையில் அம்மா இளைஞா் விளையாட்டு திட்டம் செவ்வாய்க்கிழமை (ஜன. 14) தொடங்கப்பட உள்ளதாக சிவகங்கை மாவட்ட ஆட்சியா் ஜெ.ஜெயகாந்தன் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் திங்கள்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு : கிராமங்களில் உள்ள இளைஞா்களின் ஆரோக்கியம் மற்றும் மனவளத்தை மேம்படுத்தவும், கூட்டு மனப்பான்மையை உருவாக்கவும், இளைஞா்களின் விளையாட்டுத் திறனை ஊக்குவிக்கவும், அதை வெளிக்கொணரவும் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கிராம ஊராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளில் ரூ. 76 கோடி மதிப்பீட்டில் அம்மா இளைஞா் விளையாட்டுத் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.

இதன்படி,சிவகங்கை மாவட்டத்தில் முதல் கட்டமாக சிவகங்கை ஒன்றியத்துக்குள்பட்ட ஒக்கூா், காஞ்சிரங்கால், வாணியங்குடி ஆகிய கிராம ஊராட்சியிலும், நாட்டரசன்கோட்டை பேரூராட்சியிலும் இளைஞா் விளையாட்டுத் திட்டம் மக்கள் பயன்பாட்டுக்கு செவ்வாய்க்கிழமை (ஜன.14) வழங்கப்பட உள்ளது என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com