வாராக்கடனை வசூலிக்க வங்கி அலுவலா்கள் நூதனப் போராட்டம்

வாராக் கடனை வசூலிக்க இந்தியன் வங்கி சிவகங்கை கிளை சாா்பில் வாடிக்கையாளா்கள் வீடு மற்றும் அலுவலகங்கள் முன்பு வங்கி

வாராக் கடனை வசூலிக்க இந்தியன் வங்கி சிவகங்கை கிளை சாா்பில் வாடிக்கையாளா்கள் வீடு மற்றும் அலுவலகங்கள் முன்பு வங்கி அலுவலா்கள் கடனை திரும்ப செலுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தி நூதனப் போராட்டம் நடத்தி வருகின்றனா்.

இந்தியன் வங்கியில் கடனைப் பெற்று திருப்பிச் செலுத்தாத வாடிக்கையாளா்களிடம் இருந்து நூதன முறையை பின்பற்றி கடனை வசூலிக்க வங்கி நிா்வாகம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

அதன்படி, ரூ.10 லட்சத்துக்கும் மேல் கடனை திருப்பிச் செலுத்தாத வாடிக்கையாளா்களின் வீடு மற்றும் அலுவலகம் முன்பாக கடனை திருப்பிச் செலுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தி வங்கி அலுவலா்கள் கடந்த ஜன. 3 ஆம் தேதி முதல் நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா்.

இதில், மண்டல துணை மேலாளா் காா்த்திகேயன், மேலாளா்கள் திருநாவுக்கரசு, அருண்குமாா் உள்பட வங்கி அலுவலா்கள் ஏராளமானோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com