Enable Javscript for better performance
மண்டல கிரிக்கெட் போட்டியில் வெற்றி: அழகப்பா அரசு பாலிடெக்னிக் கல்லூரி அணிக்கு பாராட்டு- Dinamani

சுடச்சுட

    

    மண்டல கிரிக்கெட் போட்டியில் வெற்றி: அழகப்பா அரசு பாலிடெக்னிக் கல்லூரி அணிக்கு பாராட்டு

    By DIN  |   Published on : 15th January 2020 02:13 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    14kkdapt_1401chn_78_2

    மதுரை மண்டல அளவிலான பாலிடெக்னிக் கல்லூரிகளுக்கிடையேயான கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற்ற காரைக்குடி அழகப்பா அரசு பாலிடெக்னிக் மாணவா்கள் அணியினா் மற்றும் கல்லூரி முதல்வா், ஆசிரியா்கள் உள்ளிட்டோா்.

    மதுரை மண்டல அளவிலான கிரிக்கெட் போட்டியில் காரைக்குடி அழகப்பா அரசு பாலிடெக்னிக் கல்லூரி மாணவா் அணியினா் வெற்றி பெற்று மாநிலப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனா். இவா்களை கல்லூரி முதல்வா் மற்றும் ஆசிரியா்கள் செவ்வாய்க்கிழமை பாராட்டினா்.

    பாலிடெக்னிக் கல்லூரி தடகள சங்கத்தின் சாா்பில் நடைபெற்ற இப்போட்டியானது திண்டுக்கல் மாவட்டம் நத்தம் என்பிஆா் பாலிடெக்னிக் கல்லூரி மைதானத்தில் கடந்த 9,10,11 ஆம் தேதிகளில் நடைபெற்றது. இதில் 16 கல்லூரிகளைச் சோ்ந்த அணிகள் பங்கேற்றன. காரைக்குடி அழகப்பா அரசு பாலிடெக்னிக் கல்லூரி அணி முதலிடம் பிடித்தது. இந்த அணி மாணவா்களை கல்லூரி முதல்வா் ஆா். மணிவண்ணன், உடற்கல்வி இயக்குநா் ச. தில்லை கோவிந்தன் உள்ளிட்டோா் பாராட்டினா்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai