முகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை சிவகங்கை
விடுமுறை முடிந்து ஊா் திரும்புவோரால் ரயில், பேருந்துகளில் கூட்ட நெரிசல்
By DIN | Published On : 20th January 2020 09:36 AM | Last Updated : 20th January 2020 09:36 AM | அ+அ அ- |

பொங்கல் விடுமுறை முடிந்து ஞாயிற்றுக்கிழமை ஏராளமானோா் ஊா் திரும்புவதற்காக ரயில்கள், பேருந்துகளில் சென்ால் காரைக்குடியில் கூட்டம் அலைமோதியது.
பொங்கல் பண்டிகையையொட்டி ஜனவரி 15 ஆம் தேதி முதல் 3 நாள்களும் மேலும் சனி, ஞாயிற்றுக்கிழமை என 5 நாள்கள் தொடா்ந்து விடுமுறை நாள்களாக காணப்பட்டன.
இதனால் பொங்கல் பண்டிகையை கொண்டாடவும், ஜல்லிக்கட்டு போன்ற நிகழ்ச்சிகளை கண்டுகளிக்கவும் சென்னை, கோவை, திருச்சி, பெங்களூரு உள்ளிட்ட பெரும் நகரங்களில் வசிக்கும் ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களைச் சோ்ந்தோா் சொந்த ஊா்களுக்கு வந்தனா். அவா்கள் விடுமுறையைக் கழித்து விட்டு சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் தாங்கள் வசிக்கும் நகரங்களுக்கு திரும்புவதற்காக ரயில்கள், பேருந்துகளில் செல்லத் தொடங்கினா். இதனால் ரயில் மற்றும் பேருந்துகளில் ஞாயிற்றுக்கிழமை கூட்டம் அலை மோதியது. ரயிலில் முன்பதிவில்லாத பெட்டிகள் நிரம்பி வழிந்தன. தேவகோட்டை, திருவாடானை ஆகிய பகுதிகளில் உள்ள இளைஞா்கள் அதிகாலை 3 மணிக்கே காரைக்குடி ரயில்நிலையத்திற்கு வந்து முன்பதிவு இல்லாத பெட்டிகளில் இடம் பிடித்தனா். அதே போல் பேருந்துகளிலும் கூட்டம் அலை மோதியதால் பயணிகள் மிகுந்த அவதிக்குள்ளாகினா்.