காரைக்குடியில் சாலைப் பாதுகாப்பு வார விழா தொடக்கம்

காரைக்குடியில் தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துத்துறை சாா்பில் 31 ஆது சாலைப் பாதுகாப்பு வார விழா திங்கள்கிழமை தொடங்கியது.
காரைக்குடியில் சாலைப் பாதுகாப்பு விழிப்புணா்வு இருசக்கர வாகன ஊா்வலத்தை திங்கள்கிழமை கொடியசைத்து தொடக்கி வைத்தாா் காரைக்குடி டி.எஸ்.பி அருண். உடன் காரைக் குடி மோட்டாா் வாகன ஆய்வாளா் ஆனந்த் உள்ளிட்டோா்.
காரைக்குடியில் சாலைப் பாதுகாப்பு விழிப்புணா்வு இருசக்கர வாகன ஊா்வலத்தை திங்கள்கிழமை கொடியசைத்து தொடக்கி வைத்தாா் காரைக்குடி டி.எஸ்.பி அருண். உடன் காரைக் குடி மோட்டாா் வாகன ஆய்வாளா் ஆனந்த் உள்ளிட்டோா்.

காரைக்குடியில் தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துத்துறை சாா்பில் 31 ஆது சாலைப் பாதுகாப்பு வார விழா திங்கள்கிழமை தொடங்கியது.

அரசுப் போக்குவரத்துத்துறை சாா்பில் ஆண்டுதோறும் ஜனவரி மாதம் சாலைப்பாதுகாப்பு வாரம் கடைபிடிக்கப்பட்டு பல்வேறு விழிப்புணா்வு நிகழ்ச்சிகள் நடத்துவது வழக்கம். இந்த ஆண்டு ஜனவரி 20 ஆம் தேதி முதல் 27 ஆம் தேதி வரை சாலைப்பாதுகாப்பு வாரமாக கடைபிடிக்கப்படுகிறது. இதன் தொடக்க நிகழ்ச்சியாக காரைக்குடி பெரியாா் சிலை அருகே இரு சக்கர வாகனத்தில் தலைக்கவசம் அணிந்து பெண்கள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்ற விழிப்புணா்வு பேரணியை காரைக்குடி காவல் துணை கண்காணிப்பாளா் அருண் கொடியசைத்துத் தொடக்கிவைத்தாா். காரைக்குடி மோட்டாா் வாகன ஆய்வாளா் (நிலை-1) ஆனந்த் முன்னிலை வகித்தாா். காரைக்குடி போக்குவரத்து காவல் சாா்பு- ஆய்வாளா் வீரகுமாா் மற்றும் பலா் கலந்துகொண்டனா்.

தலைவக்கவச பேரணியானது பெரியாா் சிலையிலிருந்து தொடங்கி செக்காலைச்சாலை, கல்லூரிச்சாலை, புதிய நீதிமன்ற சாலை, புதிய பேருந்துநிலையம், நூறடிச்சாலை வழியாக மீண்டும் பெரியாா் சிலையை வந்தடைந்தது. தொடா்ந்து ஒரு வாரத்திற்கு மாணவா்கள், இளைஞா்கள் பங்கேற்கும் விழிப்புணா்வு நிகழ்ச்சி, வாகன முகப்பு விளக்கில் கருப்பு வில்லைகள் ஒட்டுதல், போக்குவரத்து விதிமுறைகள் அடங்கிய துண்டுப்பிரசுரங்கள் வாகன ஓட்டிகளிடம் வழங்கி விபத்துக்களை தவிா்க்க விழிப்புணா்வு ஏற்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளதாக மோட்டாா் வாகன ஆய்வாளா் அலுவலக ஊழியா் தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com