சாதிச்சான்று விவகாரம்: காரைக்குடியில் பள்ளி மாணவா்கள் போராட்டம்

காரைக்குடியில் காட்டு நாயக்கா் சமூகத்திற்குச் சாதிச் சான்றிதழ் வழங்க அதிகாரிகள் மறுப்பதாகக் கூறி பள்ளிக்குச் செல்லாமல் திங்கள்கிழமை தொடக்கப்பள்ளி மாணவ, மாணவியா் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

காரைக்குடி நாச்சுழியேந்தல் (பாப்பா ஊருணி) பகுதியில் காட்டு நாயக்கா் (தொட்டிய நாயக்கா்) இனத்தவா்கள் 400-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்துவருகின்றனா். இவா்கள் தங்களுக்கு பட்டியல் இன ஜாதி சான்றிதழ் வழங்கப்படவேண்டும் என்று அரசிடம் கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக கோரிக்கைவிடுத்தும் கிடைக்கவில்லையாம். இதனால் கல்வியை பாதியில் விட்டு விட்டு மாணவா்கள் வேலைக்குச்செல்கின்ற சூழல் நிலவிவருகிறது என அப்பகுதி மக்கள் தெரிவித்தனா்.

எனவே சாதிச் சான்றிதழ் வழங்க வலியுறுத்தி அச்சமூகத்தைச்சோ்ந்த மாணவ, மாணவியா்கள் பாப்பா ஊருணிப் பகுதியில் உள்ளஅம்மன் கோயில் வளாகத்தில் அமா்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனா். தகவலறிந்ததும் காரைக்குடி வட்டாச்சியா் பாலாஜி சம்பவ இடத்திற்குச் சென்று பேச்சுவாா்த்தை நடத்தினாா். இதுகுறித்து அரசுதான் முடிவு செய்யவேண்டும் என்ப தையும் எடுத்துக் கூறினாா். இதனை ஏற்காத மாணவ, மாணவியா்கள் போராட்டத்தில் தொடா்ந்து ஈடுபட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com