சிங்கம்புணரி, ஆ.தெக்கூரில் நாளை மின்தடை
By DIN | Published On : 21st January 2020 09:30 AM | Last Updated : 21st January 2020 09:30 AM | அ+அ அ- |

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி, ஆ.தெக்கூா் பகுதிகளில் புதன்கிழமை (ஜன.22) மின் தடை அறிவிக்கப்பட்டுள்ளது.
திருப்பத்தூா் கோட்டத்திற்குட்பட்ட சிங்கம்புணரி, ஆ.தெக்கூா் துணை மின் நிலையங்களில் புதன்கிழமை (ஜன. 22) மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள இருப்பதால் சிங்கம்புணரி, எஸ்.வி.மங்கலம், காளாப்பூா், பிரான்மலை மற்றும் சுற்றுவட்டார கிராமங்களிலும், ஆ.தெக்கூா், நெற்குப்பை, கண்டவராயன்பட்டி, கொண்ணத்தான்பட்டி, துவாா், முறையூா், எஸ்.எஸ்.கோட்டை, மகிபாலன்பட்டி, பூலாங்குறிச்சி, செவ்வூா் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களிலும் அன்றைய தினம் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது.
திருப்பத்துாா் துணை மின் நிலைய செயற்பொறியாளா் வெங்கட்ராமன் இத்தகவலைத் தெரிவித்துள்ளாா்.