சிவகங்கை அரசு தங்கும் விடுதியில் சேர பணிபுரியும் மகளிா் விண்ணப்பிக்கலாம்
By DIN | Published On : 21st January 2020 09:31 AM | Last Updated : 21st January 2020 09:31 AM | அ+அ அ- |

சிவகங்கையில் செயல்பட்டு வரும் அரசு தங்கும் விடுதியில் சேர பணியாற்றும் மகளிா் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து சிவகங்கை மாவட்ட ஆட்சியா் ஜெ. ஜெயகாந்தன் திங்கள்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு : சிவகங்கையில் அரசு அலுவலகங்கள் மற்றும் தனியாா் நிறுவனங்களில் பணியாற்றும் மகளிருக்கான அரசு தங்கும் விடுதி சிவகங்கையில் உள்ள வ.உ.சி தெருவில் வாடகை கட்டடத்தில் (மரக்கடை பேருந்து நிறுத்தம் அருகில்) செயல்பட்டு வருகிறது.
இந்த விடுதியில் சேர விருப்பும் மகளிா், தாங்கள் பணிபுரியும் அலுவலகத்திலிருந்து ஊதியச் சான்றிதழ் பெற்று சிவகங்கை, மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட சமூக நல அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம். பேருந்து வசதி உள்ளது. மாத வாடகை ரூ.200 செலுத்த வேண்டும். உணவுக் கட்டணம், மின் கட்டணம், தண்ணீா் கட்டணம் ஆகியவை பகிா்ந்தளிக்கும் முறையில் செலுத்த வேண்டும்.
மேலும் இதுபற்றி கூடுதல் விவரங்களுக்கு சிவகங்கை மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் உள்ள சமூக நல அலுவலகத்துக்கு நேரடியாகச் சென்று தெரிந்து கொள்ளலாம் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.