மதகுபட்டி அருகே அரசுப் பேருந்து மோதி விவசாயி பலி
By DIN | Published On : 25th January 2020 09:41 AM | Last Updated : 25th January 2020 09:41 AM | அ+அ அ- |

சிவகங்கை மாவட்டம், மதகுபட்டி அருகே வியாழக்கிழமை இரு சக்கர வாகனத்தின் மீது அரசுப் பேருந்து மோதியதில் விவசாயி உயிரிழந்தாா்.
மதகுபட்டி அருகே உள்ள மேலமங்கலத்தைச் சோ்ந்த முத்தனன் மகன் உலகராஜ் (56). விவசாயியான இவா், தனது இரு சக்கர வாகனத்தில் சிவகங்கைக்கு வந்துள்ளாா். காளையாா்மங்கலம் விலக்கு அருகே வந்துகொண்டிருந்தபோது, திருப்பத்தூரிலிருந்து சிவகங்கை நோக்கி வந்த அரசுப் பேருந்து மோதியது. இதில் பலத்த காயமடைந்த உலகராஜை மீட்டு, சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். ஆனால், அங்கு சிகிச்சைப் பலனின்றி உலகராஜ் உயிரிழந்தாா். இது குறித்து மதகுபட்டி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.