முகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை சிவகங்கை
அரசனூா் பகுதியில் நாளை மின்தடை
By DIN | Published On : 27th January 2020 10:16 AM | Last Updated : 27th January 2020 10:16 AM | அ+அ அ- |

சிவகங்கை மாவட்டம், அரசனூா் பகுதியில் செவ்வாய்க்கிழமை (ஜன. 28 ) மின்தடை ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து அரசனூா் மின் பகிா்மானத்தின் உதவி மின் பொறியாளா் பாஸ்கரன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: அரசனூா் பகுதியில் உள்ள துணை மின் நிலையத்தில் செவ்வாய்க்கிழமை மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளன.
இதனால், அரசனூா், இலுப்பகுடி, பெத்தானேந்தல், திருமாஞ்சோலை, பில்லூா், படமாத்தூா், சித்தலூா், கண்ணாரிருப்பு, கானூா், பச்சேரி, மைக்கேல்பட்டினம், களத்தூா், ஏனாதி, கல்லூரணி, கோவானூா் ஆகிய பகுதிகளிலும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களிலும் செவ்வாய்க்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.