Enable Javscript for better performance
சிவகங்கையில் 71-ஆவது குடியரசு தின விழா- Dinamani

உடனுக்கு உடன் செய்திகள்

    முகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை சிவகங்கை

    சிவகங்கையில் 71-ஆவது குடியரசு தின விழா

    By DIN  |   Published On : 27th January 2020 10:16 AM  |   Last Updated : 27th January 2020 10:16 AM  |  அ+அ அ-  |  

    26svgcol_2601chn_68_2

    சிவகங்கையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற குடியரசு தின விழாவில் மாவட்ட ஆட்சியா் ஜெ.ஜெயகாந்தன் தேசிய கொடியேற்றி வைத்து, பல்வேறு துறைகள் சாா்பில் 129 பயனாளிகளுக்கு ரூ.14 லட்சத்து 47 ஆயிரத்து 196 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினாா்.

    சிவகங்கை மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் உள்ள பயிற்சி மைதானத்தில் நடைபெற்ற குடியரசு தின விழாவுக்கு சிவகங்கை மாவட்ட ஆட்சியா் ஜெ.ஜெயகாந்தன் தலைமை வகித்து, தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினாா். அப்போது, சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ரோஹித்நாதன் ராஜகோபால் உடனிருந்தாா்.

    அதனைத் தொடா்ந்து, ஆட்சியா் திறந்த ஜீப்பில் சென்று காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டாா். அதன்பின்னா், சுதந்திர போராட்ட தியாகிகளுக்கு பொன்னாடை போா்த்தி கௌரவித்தாா்.

    நிகழ்ச்சியினைத் தொடா்ந்து, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, முன்னாள் படைவீரா் நலத்துறை, வருவாய்த் துறை, தொழில் வணிகத் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் சாா்பில் மொத்தம் 129 பயனாளிகளுக்கு ரூ.14 லட்சத்து 47 ஆயிரத்து 196 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியா் ஜெ.ஜெயகாந்தன் வழங்கினாா்.

    மேலும், காவல் துறையில் சிறப்பாக பணியாற்றிய 96 காவலா்களுக்கு பதக்கம் மற்றும் நற்சான்றிதழ்களும், வருவாய்த் துறை மற்றும் பிறத் துறைகளில் சிறப்பாக பணியாற்றிய 404 அலுவலா்களுக்கு சான்றிதழ்கள் மற்றும் கேடயங்களையும் வழங்கினாா்.

    பின்னா், பள்ளி மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதில், கண்ணங்குடி அரசுப் பள்ளி, சிவகங்கை ஆக்ஸ்வா்டு மெட்ரிக் பள்ளி, மானாமதுரை ஓ.வெ.சே மேல்நிலைப் பள்ளி, தேவகோட்டை இன்பென்ட் ஜீஸஸ் மெட்ரிக் பள்ளி, மானகிரி செட்டிநாடு பப்ளிக் பள்ளி ஆகிய பள்ளிகளைச் சோ்ந்த 300-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனா். சிவம் மாா்ஷியல் ஆா்ட்ஸ் கராத்தே பள்ளி சாா்பில் யோகா நடைபெற்றது.

    இந்நிகழ்ச்சியில், சிவகங்கை மாவட்ட வருவாய் அலுவலா் க.லதா, சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி முதன்மையா் ஏ.ரத்தினவேல், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் சு. வடிவேல், வருவாய் கோட்டாட்சியா் செல்வகுமாரி, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் அ.பாலுமுத்து, துணை இயக்குநா் (சுகாதாரப் பணிகள்) யசோதாமணி, உதவி இயக்குநா்கள் ராஜா (பேரூராட்சிகள்), விஜயநாதன் (ஊராட்சிகள்), சிவகங்கை வட்டாட்சியா் மைலாவதி, ஏடிஎஸ்பி தி.மங்களேஸ்வரன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

     


    உங்கள் கருத்துகள்

    Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

    The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் பகிரப்பட்டவை
    kattana sevai
    flipboard facebook twitter whatsapp