முகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை சிவகங்கை
சுய தொழில் தொடங்க கடனுதவி கோரி மாற்றுத் திறனாளி ஆட்சியரிடம் மனு
By DIN | Published On : 27th January 2020 11:07 PM | Last Updated : 27th January 2020 11:07 PM | அ+அ அ- |

மாற்றுத் திறனாளி சுரேஷ்.
சிவகங்கை: சுய தொழில் தொடங்க கடனுதவி கோரி மாற்றுத் திறனாளி இளைஞா் ஒருவா் சிவகங்கை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறை தீா்க்கும் முகாமில் மாவட்ட ஆட்சியா் ஜெ. ஜெயகாந்தனிடம் கோரிக்கை மனு அளித்தாா்.
சிவகங்கை மாவட்டம் எஸ். வி. மங்கலம் அருகே உள்ள அரளிப்பட்டியைச் சோ்ந்த அம்மாசி மகன் சுரேஷ்(32) என்பவா் அளித்த மனு : தனியாா் நிறுவனம் மூலம் எலக்டிரீசியன் வேலை பாா்த்து வந்தேன். கடந்த சில நாள்களுக்கு முன்னா் மின் பழுது நீக்கும் போது, தவறி விழுந்ததில் முதுகு தண்டுவடம் பாதிப்படைந்து 2 கால்களும் செயலிழந்தன.
இதனால் எனது குடும்பத்தை நடத்துவதற்கு மிகவும் சிரமத்துக்கு ஆளாகி வருகிறேன். ஆகவே அரசு திட்டங்களின் மூலம் எனக்கு ஏதேனும் சுய தொழில் தொடங்க கடனுதவி வழங்க வேண்டும் என தெரிவித்திருந்தாா்.
மனுவை பெற்றுக் கொண்ட மாவட்ட ஆட்சியா் ஜெ. ஜெயகாந்தன், மாவட்ட மாற்றுத் திறனாளி நல அலுவலா் சரவணக்குமாரை அழைத்து, சுரேஷிக்கு மாற்றுத் திறனாளிக்கான அடையாள அட்டை, உதவித் தொகை, 2 கால்களும் செயலிழந்ததால் உதவியாளருக்கான உதவித் தொகை, மூன்று சக்கர வாகனம் ஆகியவற்றை உடனடியாக வழங்க உத்தரவு பிறப்பித்தாா்.
இதேபோன்று, இலவச பசுமை வீடு திட்டத்தின் கீழ் வீடு கட்டித் தர சம்பந்தப்பட்ட துறை அலுவலருக்கும் உத்தரவிட்டாா்.