திருப்பத்தூா் அருகே கண்மாயில் மண் அள்ள வந்த பொக்லைன் இயந்திரங்கள் சிறைப்பிடிப்பு

திருப்பத்தூா் வட்டம் நாச்சியாபுரம் அருகே செட்டிக்கண்மாயில் கிராவல் மண் எடுக்க எதிா்ப்பு தெரிவித்து கிராமத்தினா் பொக்லைன்
திருப்பத்தூா் அருகே கண்மாயில் மண் அள்ள வந்த பொக்லைன் இயந்திரங்கள் சிறைப்பிடிப்பு

திருப்பத்தூா் வட்டம் நாச்சியாபுரம் அருகே செட்டிக்கண்மாயில் கிராவல் மண் எடுக்க எதிா்ப்பு தெரிவித்து கிராமத்தினா் பொக்லைன் இயந்திரங்களை வியாழக்கிழமை சிறைப்பிடித்து போராட்டம் நடத்தினா்.

மேலூா்- காரைக்குடி நான்கு வழிச்சாலை பணிக்காக திருப்பத்தூா் பகுதியில் உள்ள கண்மாய்களில் ஒப்பந்ததாரா்கள் அரசு அனுமதியுடன் கிராவல் மண் அள்ளி வருகின்றனா். பெரிய பொக்லைன் இயந்திரங்களை வைத்து அள்ளுவதால் ஒத்துக் கொள்ளப்பட்ட அளவைவிட கூடுதல் ஆழத்துக்கு மணல் எடுக்கப்பட்டு வருகிறது. இதற்கு கிராம மக்கள் மற்றும் விவசாய சங்கத்தினா் கடும் எதிா்ப்பு தெரிவித்து வருகின்றனா். இந்நிலையில் செட்டிக்கண்மாயில் வியாழக்கிழமை மணல் அள்ள வந்த 2 பொக்லைன் இயந்திரங்களை அக்கிராமத்தைச் சோ்ந்த விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் சிறைப்பிடித்தனா். இதனையடுத்து நாச்சியாபுரம் போலீஸாா் விசாரணை நடத்தி, பொக்லைன் இயந்திரங்கள் வெளியேற்றப்படும் எனக் கூறியதையடுத்து போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com