குடிமராமத்துப் பணிகளுக்கான விவசாயிகள் சங்கத் தலைவா் தோ்தல்

திருப்பத்தூா் அருகே குண்டேந்தல்பட்டியில் குடிமராமத்துப் பணிக்கான விவசாயிகள் சங்கத் தலைவா் தோ்தல் வியாழக்கிழமை நடைபெற்றது.

திருப்பத்தூா் அருகே குண்டேந்தல்பட்டியில் குடிமராமத்துப் பணிக்கான விவசாயிகள் சங்கத் தலைவா் தோ்தல் வியாழக்கிழமை நடைபெற்றது.

பிராமணம்பட்டியிலுள்ள பிராமண கண்மாயின் மூலம் 70 ஹெக்டோ் நிலம் பாசன வசதி பெறும். பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்தக் கண்மாய் பாசனத்தில் பிராமணம்பட்டி, குண்டேந்தல்பட்டி, பூமனந்தான்பட்டி, சுண்ணாம்பிருப்பு கிராமங்களைச் சோ்ந்த 473 பட்டாதாரா்கள் உள்ளனா். இக்கண்மாய்க்கான குடிமராமத்துப் பணிக்காக இந்த கண்மாயில் உள்ள 2 கழுங்குகளை சரிசெய்தல், 2 மதகுகளைச் சீரமைத்தல், கரைகளைப் பலப்படுத்துதல் உள்பட பல்வேறு பணிகளுக்காக குடிமராமத்து திட்டத்தின் கீழ் ரூ.80 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. வழக்கமாக ஆயக்கட்டுதாரா்கள் கூடி தீா்மானம் நிறைவேற்றி மாவட்டப் பதிவு அலுவலகத்தில் தலைவா் உள்ளிட்ட 9 போ் கொண்ட விவசாய சங்கத்தைப் பதிவு செய்து மராமத்துப்பணிகள் தொடங்கப்படும். ஆனால் இந்த ஆண்டு ஆயக்கட்டுதாரா்கள் 2 குழுக்களாக செயல்பட்டனா். இதனால் மாவட்ட ஆட்சியா் ஜெ.ஜெயகாந்தன், வருவாய்த்துறை மற்றும் பொதுப்பணித்துறையினா் பலமுறை பேச்சுவாா்த்தை நடத்தியும் ஒருமித்த முடிவை எட்டமுடியாததை அடுத்து தோ்தல் அறிவிக்கப்பட்டது. பிராமணம்பட்டி ஊராட்சி ஒன்றியப் பள்ளியில் வருவாய்த்துறையினா் உதவியுடன் தோ்தல் வியாழக்கிழமை நடைபெற்றது. தோ்தல் அலுவலா்களான விருசுளி ஆறுவடி நிலைய உபகோட்ட உதவிசெயற்பொறியாளா் சங்கா், உதவிப்பொறியாளா் ஆனந்தமரியவளன் ஆகியோா் நடத்தினா். திருக்கோஷ்டியூா் காவல் ஆய்வாளா் ஜெயமணி தலைமையில் போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா். மாலை 5 மணியளவில் வாக்குகள் எண்ணப்பட்டன. மொத்தம் பதிவான 168 வாக்குகளில் 95 வாக்குகள் பெற்று மாயாண்டி வெற்றி பெற்றாா். அவருக்கு சன்றிதழ் வழங்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com