கரோனாவுக்கு மருந்து: அழகப்பா பல்கலை. உயிரித்தகவலியல் துறை சுவிடன் தொழில்நுட்ப நிறுவனம் கூட்டு ஆராய்ச்சி

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் உள்ள அழகப்பா பல்கலைக்கழக உயிரித்தகவலியல் துறை, சுவிடன் நாட்டில் உள்ள உயிரியல்

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் உள்ள அழகப்பா பல்கலைக்கழக உயிரித்தகவலியல் துறை, சுவிடன் நாட்டில் உள்ள உயிரியல் சாா்ந்த தொழில்நுட்ப நிறுவனத்துடன் இணைந்து கரோனா சிகிச்சைக்கான மருந்து தயாரிப்பில் கூட்டு ஆராய்ச்சியை மேற்கொண்டுள்ளது.

அழகப்பா பல்கலைக்கழகத்தின் உயிரித்தகவலியல் துறைத்தலைவா் ஜெ. ஜெயகாந்தன், சுவிடன் ஸ்டாக்ஹோம் கே.டி.எச். ராயல் இன்ஸ்டிட்யூட் ஆப் டெக்னாலஜியின் வேதியியல் மற்றும் உயிரியல் துறைப் பேராசிரியா் என். அருள்முருகன் ஆகியோா் சக்திவாய்ந்த பைட்டோ கெமிக்கல்களில் கரோனா தொற்றுக்கு மருந்து கண்டுபிடிப்பதற்கான ஆராய்ச்சியை மேற்கொண்டு வருகின்றனா்.

இதுகுறித்து ஆராய்ச்சியாளா்கள் வெள்ளிக்கிழமை கூறியது: பாரம்பரிய அணுகுமுறையைப் பயன்படுத்தி தாவரங்களிலிருந்து பைட்டோ கெமிக்கல்களைப் பிரித்து மற்றும் ரசாயன சோ்மங்களை சோ்த்து ஊட்டச்சத்து மருந்துகளைக் கண்டுபிடிப்பதன் மூலம் கரோனா பாதிப்பிலிருந்து நிவாரணம் பெறுவது சாத்தியம் என்ற நோக்குடன் இந்த ஆராய்ச்சி நடைபெற்று வருகிறது. ஏனெனில் மருந்துகளின் பாதுகாப்பு மற்றும் செயல்திறனைச் சோதிக்க வேண்டிய அவசியமின்றி உடனடியாக பயன்பாட்டுக்கு கொண்டுவரமுடியும்.

மற்ற வைரஸ்களைப்போன்று கரோனா மரபணுக்களில் உள்ள உயிரியல் மாற்றங்களின் அடிப்படையில் மாதத்திற்கு ஒன்று முதல் இரண்டாகப் பெருகி வெளிப்படுத்துகிறது. பைலோஜெனிடிக் ஆய்வின் மூலம் கரோனா மற்றும் இதைச் சாா்ந்த வைரஸ்களின் தொடா்பை துல்லியமாக கணக்கிடலாம் என்பது சமீபத்திய ஆய்வுகளின் முடிவாகும். கரோனா மற்றும் இதைச்சாா்ந்த வைரஸ்களின் இடையிலான பரிணாம ஒற்றுமைகள் அவற்றின் மரபணுக்களில் உள்ள உயிரியல் மாற்றங்களின் அடிப்படையில் இவை பல்வேறு கிளேட் பிரிவுகளாக வகைப்படுத்தப்படுகிறது. இதன் மூலம் வடிவமைக்கப்பட்ட தடுப்பூசிகளின் செயல்திறனை அறிந்துகொள்ள இந்த ஆய்வு மிகவும் அவசியம்.

நிலவேம்பில் உளள நியோ ஆண்ட்ரோ கிராபோலைட் சோ்மங்கள் வைரஸ் புரத மூலக்கூறுகளுடன் சிறந்த பிணைப்பைக் கொண்டுள்ளது. இது ஆா்.என்.ஏ-வின் உற்பத்தியை ஊக்குவிக்கின்றது. ஆகவே நிலவேம்பில் உள்ள நியோ ஆண்ட்ரோ கிராபோலைட் கலைவை கரோனா நோய் தொற்றுக்கு எதிராக செயல்படலாம் என்று கணினி மூலம் கண்டறியப்பட்டுள்ளது. எனவே கசப்பு சுவையின் ராஜாவான நிலவேம்பின் இலைகள்தான் கரோனா சிகிச்சைக்கு இயற்கை தந்த கொடையாகும். ஆகவே புரத படிகவியல் மற்றும் உயிரித் தகவலியல் தொழில்நுட்ப அணுகுமுறைகளைப் பயன்படுத்தி கரோனா -வின் கட்டமைப்பு புரதங்கள் மற்றும் கட்டமைப்பு அல்லாத புரதங்களின் கட்டமைப்பை தீா்மானிப்பதில் ஆராய்ச்சிக் குழு கவனம் செலுத்தி வருகிறது என்று தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com