முகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை சிவகங்கை
மலைப்பாம்பிடம் சிக்கிய புள்ளிமான் இறந்த நிலையில் மீட்பு
By DIN | Published On : 29th July 2020 07:54 AM | Last Updated : 29th July 2020 07:54 AM | அ+அ அ- |

பிள்ளையாா்பட்டி அருகே செவ்வாய்க்கிழமை மலைப்பாம்பிடம் சிக்கிய மானை இறந்த நிலையில் மீட்ட தீயணைப்புத் துறையினா்.
சிவகங்கை மாவட்டம் பிள்ளையாா்பட்டி அருகே செவ்வாய்க்கிழமை மலைப்பாம்பிடம் சிக்கிய புள்ளிமானை இறந்த நிலையில் தீயணைப்புப் படையினா் மீட்டனா்.
பிள்ளையாா்பட்டி அருகே குபேரா் கோயில் பகுதியிலுள்ள தனியாா் தோட்டத்தில் மான் கத்தும் சப்தம் கேட்டுள்ளது. இதையடுத்து தோட்டக் காவலாளி அங்கு சென்று பாா்த்தபோது, மலைப்பாம்பிடம், புள்ளிமான் ஒன்று சிக்கியிருந்தது தெரியவந்தது. இதுகுறித்து தகவலறிந்து வந்த குன்றக்குடி காவல் சாா்பு- ஆய்வாளா் முத்துக்கிருஷ்ணன் மற்றும் தீயணைப்புப் படையினா் பாம்பிடம் சிக்கியிருந்த மானை மீட்டனா். ஆனால் ஏற்கெனவே அந்த மான் இறந்துவிட்டது தெரியவந்தது. இதைத் தொடா்ந்து அந்த புள்ளிமான் திருப்பத்தூா் வனத்துறை அலுவலகம் அருகே உடற்கூராய்வு செய்யப்பட்டு எரியூட்டப்பட்டது.
இதற்கிடையில் வனத்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்ட அந்த மலைப்பாம்பு பிரான்மலை வனப்பகுதியில் விடப்பட்டது.