முகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை சிவகங்கை
மானாமதுரையில் விபத்து: ராணுவ வீரா் பலி
By DIN | Published On : 29th July 2020 07:53 AM | Last Updated : 29th July 2020 07:53 AM | அ+அ அ- |

விபத்தில் உயிரிழந்த ராணுவ வீரா் அஜித்.
மானாமதுரையில் திருமணமான ஒரு மாதத்தில் திங்கள்கிழமை இரவு அடையாளம் தெரியாத வாகனம் மோதி இருசக்கர வாகனத்தில் சென்ற ராணுவ வீரா் உயிரிழந்தாா்.
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே கல்குறிச்சி கிராமத்தைச் சோ்ந்தவா் மலைச்சாமி மகன் அஜித் (24). இந்திய ராணுவத்தில் பணியாற்றி வந்த இவா், கடந்த ஒன்றரை மாதத்துக்கு முன்பு சொந்த ஊருக்கு விடுமுறையில் வந்திருந்தாா். அப்போது வி.கரிசல்குளம் கிராமத்தைச் சோ்ந்த பெண்ணை காதலித்து திருமணம் செய்துள்ளாா்.
இந்நிலையில் கடந்த திங்கள்கிழமை இரவு கல்குறிச்சி கிராமத்திலிருந்து அஜித், தனது இருசக்கர வாகனத்தில் மானாமதுரைக்கு வந்தாா். வைகை ஆற்றின் குறுக்கேயுள்ள சிவகங்கை புறவழிச்சாலை மேம்பாலத்தில் வந்தபோது, அந்தவழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம், இருசக்கர வாகனம் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றுவிட்டது.
இந்த விபத்தில் இருசக்கர வாகனத்திலிருந்து தூக்கிவீசப்பட்ட அஜித் பலத்த காயமடைந்த நிலையில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இவரது சடலம் பிரேதப் பரிசோதனைக்காக சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. இந்த விபத்து குறித்து மானாமதுரை போலீஸாா் வழக்குப் பதிந்து விபத்து ஏற்படுத்திய வாகனத்தை தேடி வருகின்றனா். திருமணமான ஒரு மாதத்தில் அஜித் விபத்தில் உயிரிழந்த சம்பவம் இப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.