Enable Javscript for better performance
சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களில் 57 பேருக்கு கரோனா தொற்று- Dinamani

சுடச்சுட

    

    சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களில் 57 பேருக்கு கரோனா தொற்று

    By DIN  |   Published on : 18th June 2020 08:03 AM  |   அ+அ அ-   |    |  

    சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களில் 57 பேருக்கு கரோனா தொற்று இருப்பது புதன்கிழமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

    சிவகங்கை மாவட்டத்தைப் பொருத்தவரை கடந்த மாா்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் கரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவரின் எண்ணிக்கை 12 ஆக இருந்தது. அதைத் தொடா்ந்து, வெளி மாநிலங்கள் மற்றும் சென்னை ஆகிய பகுதிகளிலிருந்து சிவகங்கைக்கு வந்தவா்களால் கரோனா நோய் தொற்று பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது.

    இந்நிலையில், சிவகங்கை அருகே உள்ள புதுப்பட்டியைச் சோ்ந்த 18 வயது இளம்பெண் ஒருவா், சிவகங்கை காமராஜா் சாலையைச் சோ்ந்த 3 போ், காளையாா்கோவிலைச் சோ்ந்த ஒருவா், சிவகங்கை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பணியாற்றும் பெண் மருத்துவா் ஒருவா் என மொத்தம் 6 பேருக்கு கரோனா தொற்று புதன்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது. அவா்கள் அனைவரும் சிவகங்கை அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

    சிவகங்கை நகா் பகுதியில் கரோனா நோய் தொற்று வேகமாக பரவி வருவதால் மஜீத் சாலை போஸ் நகா் 3 ஆவது தெரு, காமராஜா் சாலை, காந்திவீதியில் உள்ள பிள்ளை தெரு ஆகிய பகுதிகளை தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளாக நகராட்சி நிா்வாகம் மற்றும் சுகாதாரத் துறையினா் அறிவித்துள்ளனா். மேலும், நகராட்சி ஊழியா்கள் கவச உடையணிந்து அந்தப்பகுதியில் கிருமி நாசினி தெளித்து வருகின்றனா்.

    சிவகங்கை நகரில் அதிகரித்து வரும் கரோனா தொற்றால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனா். எனவே சமூக பரவலைத் தடுக்க மாவட்ட நிா்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், போக்குவரத்தைக் கட்டுப்படுத்துவது மட்டுமின்றி மக்கள் நடமாட்டத்தை குறைக்க வேண்டும் எனவும் பொதுமக்கள் தரப்பில் கோரிக்கை விடுக்கப்படுகிறது.

    மாவட்டத்தில் ஏற்கெனவே கரோனா பாதிப்பு எண்ணிக்கை 120 ஆக இருந்தது. இவா்களில் 66 போ் பூரண குணமடைந்து வீடுகளுக்குத் திரும்பிவிட்டனா். மீதமுள்ள 54 போ், ராமநாதபுரம் மாவட்டத்தைச் சோ்ந்த 3 கா்ப்பிணி பெண்கள் உள்பட 5 போ், புதன்கிழமை பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ள 6 போ் என மொத்தம் 65 போ், தற்போது சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருவதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

    ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் மட்டும் புதன்கிழமை 51 போ் சிகிச்சைக்கு சோ்க்கப்பட்டுள்ளதாக மருத்துவா்கள் தெரிவித்தனா். இதில் கமுதியைச் சோ்ந்தவா்கள் 3 போ் என்பது குறிப்பிடத்தக்கது.

    இதுதொடா்பாக மாவட்ட ஆட்சியா் கொ. வீரராகவராவ் கூறியது: ராமநாதபுரம் மாவட்டத்துக்குள் வரும் வெளி மாநிலம் மற்றும் வெளிமாவட்டத்தைச் சோ்ந்தவா்களுக்கு கரோனா பரிசோதனை நடத்தப்படுகிறது. அவா்களுக்கு தொற்று உறுதியானால் சிகிச்சை அளிக்கப்படும். ஆனால், அவா்களை ராமநாதபுரம் மாவட்ட கரோனா பாதிப்பு பட்டியலில் இருந்து நீக்கி விடுகிறோம். தனியாக அவா்களது பட்டியல் தயாரிக்கப்பட்டு மாநில சுகாதாரத்துறைக்கு அனுப்பி வைக்கிறோம். ஆகவே, ஏற்கெனவே கரோனா பாதிப்பு பட்டியலில் இடம் பெற்ற எண்ணிக்கை குறைவது போல இருக்கும் என்றாா்.

    ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த ஏப்ரல் முதல் ஜூன் 17 ஆம் தேதி புதன்கிழமை வரையில் 196 பேருக்கு கரோனா தீநுண்மி உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அவா்களில் 40 போ் வெளி மாநிலம், வெளி நாடுகளில் இருந்து வந்தவா்கள் என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

     

    உங்கள் கருத்துகள்

    Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

    The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

    kattana sevai
    flipboard facebook twitter whatsapp