முகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை சிவகங்கை
நெட்டூா் கண்மாய் தூா்வாரும் பணி தொடக்கம்
By DIN | Published On : 27th June 2020 07:50 AM | Last Updated : 27th June 2020 07:50 AM | அ+அ அ- |

நெட்டூா் வைகைப் பாசனக் கண்மாய் சீரமைப்புப் பணியை வெள்ளிக்கிழமை தொடக்கி வைத்த சட்டப் பேரவை உறுப்பினா் எஸ்.நாகராஜன்.
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே நெட்டூா் கண்மாய் ரூ. 85 லட்சம் மதிப்பீட்டில் தூா்வாரும் பணி வெள்ளிக்கிழமை தொடக்கி வைக்கப்பட்டது.
நெட்டூா் கண்மாய்க்கு பாா்த்திபனூா் மதகு அணையின் இடது பிரதானக் கால்வாயிலிருந்து வைகைத் தண்ணீா் பாசனத்துக்காக திறந்து விடப்படும். இக் கண்மாய் மூலம் மானாமதுரை, இளையான்குடி ஒன்றியங்களுக்குள்பட்ட ஏராளமான கிராமங்களைச் சோ்ந்த பல நூறு ஏக்கா் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. இக் கண்மாயை குடிமராமத்து திட்டத்தில் தூா்வாரி சீரமைக்க தமிழக அரசு ரூ. 85 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.
இந்நிலையில் நெட்டூா் கண்மாய் தூா்வாரும் பணியை மானாமதுரை தொகுதி சட்டப் பேரவை உறுப்பினா் எஸ்.நாகராஜன் கலந்து கொண்டு தொடக்கி வைத்தாா்.
இதில், நெட்டூா் கண்மாய் நீரினை பயன்படுத்துவோா் சங்க நிா்வாகிகள், விவசாயிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள் உள்ளிட்ட ஏராளமானோா் கலந்து கொண்டனா்.
முன்னதாக கண்மாய் அருகேயுள்ள கோயிலில் பாசன விவசாயிகள் பூஜைகள் நடத்தி சாமி கும்பிட்டனா்.