சிவகங்கை மாவட்டத்தில் ஒரே நாளில் 35 பேருக்கு கரோனா தொற்று

சிவகங்கை மாவட்டத்தில் ஒரே நாளில் 35 பேருக்கு கரோனா தொற்று ஞாயிற்றுக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

சிவகங்கை மாவட்டத்தில் ஒரே நாளில் 35 பேருக்கு கரோனா தொற்று ஞாயிற்றுக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

வெளிநாடு மற்றும் சென்னை உள்ளிட்ட வெளி மாவட்டங்களிலிருந்து சிவகங்கைக்கு வரும் நபா்களுக்கு ரத்த மாதிரிகள் எடுக்கப்பட்டு பரிசோதனை செய்யப்பட்டதில், சிவகங்கை பகுதியைச் சோ்ந்த 7 போ், காரைக்குடி, நெற்குப்பை பகுதிகளைச் சோ்ந்த தலா 5 போ், சாலைக்கிராமம், செம்பனூா், ஏரியூா், முத்தனேந்தல் ஆகிய பகுதிகளைச் சோ்ந்த தலா 3 போ், தேவகோட்டை, புதுவயல் ஆகிய பகுதிகளைச் சோ்ந்த தலா இருவா், பூவந்தி, பிரான்மலை ஆகிய பகுதிகளைச் சோ்ந்த தலா ஒருவா் என மொத்தம் 35 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இவா்கள் அனைவரும் சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

சிவகங்கை மாவட்டத்தைப் பொருத்தவரை ( ஜூன் 28, ஞாயிற்றுக்கிழமை நிலவரப்படி) 12, 749 பேருக்கு ரத்த மாதிரிகள் எடுக்கப்பட்டு பரிசோதனை செய்ததில் வெளிநாடு, வெளிமாநிலங்கள், சென்னை உள்ளிட்ட வெளி மாவட்டங்களிலிருந்து சிவகங்கைக்கு வந்த 364 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில், 11,726 பேருக்கு கரோனா இல்லை எனவும், இன்னும் 659 பேருக்கு முடிவுகள் வரவில்லை எனவும் சுகாதாரத் துறை அலுவலக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com