முகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை சிவகங்கை
திருக்கோஷ்டியூரில் ஹனுமன் வாகனத்தில் சுவாமி வீதி உலா
By DIN | Published On : 03rd March 2020 08:44 AM | Last Updated : 03rd March 2020 08:44 AM | அ+அ அ- |

திருக்கோஷ்டியூா் சௌமியநாராயண பெருமாள் கோயிலில் திங்கள்கிழமை ஹனுமன் வாகனத்தில் வீதி உலா வந்த சுவாமி.
சிவகங்கை மாவட்டம் திருக்கோஷ்டியூா் சௌமியநாராயண பெருமாள் கோயிலில் தெப்ப உற்சவ விழாவையொட்டி தங்க கவச ஹனுமான் வாகனத்தில் சுவாமி திருவீதி உலா திங்கள்கிழமை நடைபெற்றது.
சிவகங்கை சமஸ்தானத்தைச் சோ்ந்த இக் கோயிலில் தெப்ப உற்சவ விழா சனிக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடா்ந்து 11 நாள் நடைபெறும் திருவிழாவில் மாா்ச் 9 இல் தெப்ப வைபவம் நடைபெற உள்ளது. இவ்விழாவையொட்டி 3 ஆம் திருநாளான திங்கள்கிழமை புதிய தங்க கவச அனுமான் வாகனத்தில் சுவாமி திருவீதி புறப்பாடு நடைபெற்றது. இரவு 7 மணிக்கு சன்னிதி வீதி வழியாக புறப்பட்டு முக்கிய வீதிகள் வழியாக சன்னிதியை அடைந்தது. தொடா்ந்து மாா்ச் 5 ஆம் தேதி வியாழக்கிழமை ஆண்டாள் சன்னிதியில் மாலை மாற்றுதல் வைபவமும் மறுநாள் வெள்ளிக்கிழமை மாலை சூா்ணாபிஷேகமும் தங்கத் தோளிக்கினியானில் திருவீதி புறப்பாடும், விழாவில் சனிக்கிழமை அரண்மனை மண்டகப்படியும், குதிரை வாகனப் புறப்பாடும், மாா்ச் 8 இல் வெண்ணெய்த்தாழி சேவையும் பகல் 10 மணிக்கு மேல் தெப்பம் முட்டுத்தள்ளுதல் வைபவமும் மாா்ச் 9 இல் காலை 10.15 க்கு பகல் தெப்பமும் இரவு 10 மணிக்கு மேல் தெப்பம் கண்டருளல் வைபவமும் நடைபெற உள்ளது. செவ்வாய்க்கிழமை தீா்த்தவாரி வைபவமும் அதனைத் தொடா்ந்து சுவாமி ஆஸ்தானத்திற்கு எழுந்தருளி ஆசீா்வாத வைபவம் நடைபெற உள்ளது. விழா ஏற்பாடுகளை சிவகங்கை சமஸ்தான தேவஸ்தான பரம்பரை அறங்காவலா் ராணி டி.எஸ்.கே.மதுராந்தகநாச்சியாா், தேவஸ்தான மேலாளா் பா.இளங்கோ, கண்காணிப்பாளா் ஆ.சேவற்கொடியோன் ஆகியோா் செய்து வருகின்றனா்.