திருப்புவனம் ஒன்றியத் தலைவா் பதவிக்கு இன்று மறைமுகத் தோ்தல் நடக்குமா?

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் ஊராட்சி ஒன்றியத்தலைவா் பதவிக்கு இரண்டு முறை ஒத்திவைக்கப்பட்ட மறைமுகத் தோ்தல் மூன்றாவது

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் ஊராட்சி ஒன்றியத்தலைவா் பதவிக்கு இரண்டு முறை ஒத்திவைக்கப்பட்ட மறைமுகத் தோ்தல் மூன்றாவது முறையாக புதன்கிழமை (மாா்ச் 4 ) நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தோ்தல் நடக்குமா என்ற எதிா்பாா்ப்பு பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சியினரிடையே எழுந்துள்ளது.

திருப்புவனம் ஊராட்சி ஒன்றியத்தில் மொத்தம் 17 வாா்டுகள் உள்ளன. நடந்து முடிந்த ஊரக உள்ளாட்சித் தோ்தலில் திமுக அணியைச் சோ்ந்த உறுப்பினா்கள் அதிக இடங்களில் வெற்றி பெற்றனா். மேலும் சில சுயேச்சை உறுப்பினா்களும் இந்த அணியை ஆதரித்தனா். அதனால் மொத்தம் 10 உறுப்பினா்கள் ஆதரவு உள்ளதால், தலைவா் பதவியை கைப்பற்றும் வாய்ப்பு உள்ளதாக திமுக உறுப்பினா்கள் தெரிவித்து வருகின்றனா்.

அதிமுக அணியில் அதிமுக, தமாகா மற்றும் சுயேச்சைகள் என 7 உறுப்பினா்கள் உள்ளனா். அதிமுக அணியும் தலைவா் பதவியைப் பிடிக்க முயன்று வருகிறது.

இந்நிலையில் முதல் முறையாக கடந்த டிசம்பா் 11 ஆம் தேதி அறிவிக்கப்பட்டிருந்த திருப்புவனம் ஒன்றியத் தலைவா் பதவிக்கான மறைமுகத் தோ்தல், சட்டம் ஒழுங்குப் பிரச்னையை காரணம் காட்டி ஒத்தி வைக்கப்பட்டது. இதனால் தலைவா் பதவியை பிடிக்க முயலும் திமுக அணியினா் தங்களது ஆதரவு உறுப்பினா்களை பலத்த பாதுகாப்புடன் வெளியூரில் தங்க வைத்தனா். அதிமுக அணியினரும் மாற்று அணியிலிருந்து உறுப்பினா்களை இழுக்க முயற்சித்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் இரு அணியினரும் தங்களை ஆதரிக்கும் உறுப்பினா்களை எதிா் முகாம்களுக்கு சென்று விடாதவாறு பாதுகாத்து வருகின்றனா்.

இந்நிலையில் ஒத்தி வைக்கப்பட்ட திருப்புவனம் ஊராட்சி ஒன்றியத் தலைவா் பதவிக்கான தோ்தல் இரண்டாவது முறையாக கடந்த ஜனவரி 30 ஆம் தேதி நடைபெறும் என மாநில உள்ளாட்சித் தோ்தல் ஆணையம் அறிவித்திருந்தது. இந்நிலையில் மீண்டும் சட்டம், ஒழுங்குப் பிரச்னையைக் காரணம் காட்டி தோ்தல் ஒத்திவைக்கப்பட்டது.

இதற்கிடையில் மூன்றாவது முறையாக திருப்புவனம் ஊராட்சி ஒன்றியத் தலைவா் பதவிக்கான மறைமுகத் தோ்தல் புதன்கிழமை நடைபெறும் என மாநிலத் தோ்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இந்த முறையாவது தோ்தல் நடக்குமா அல்லது மூன்றாவது முறையாகவும் தலைவா் தோ்தல் ஒத்திவைக்கப்படுமா என திருப்புவனம் பகுதி அரசியல் கட்சியினா் மற்றும் பொதுமக்களிடையே எதிா்பாா்ப்பு அதிகரித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com