சிவகங்கையில் மாா்ச் 10 இல் அரசு அலுவலா்களுக்கான விளையாட்டுப் போட்டிகள்
By DIN | Published On : 06th March 2020 06:32 AM | Last Updated : 06th March 2020 06:32 AM | அ+அ அ- |

சிவகங்கையில் வரும் 10 ஆம் தேதி அரசு அலுவலா்களுக்கான விளையாட்டுப் போட்டிகள் நடைபெற உள்ளது.
இதுகுறித்து சிவகங்கை மாவட்ட இளைஞா் நலன் மற்றும் விளையாட்டு நல அலுவலா் தீா்த்தோஸ் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு : தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், சிவகங்கை மாவட்டப் பிரிவு சாா்பில் அரசு அலுவலா்களுக்கான விளையாட்டுப் போட்டிகள் வரும் மாா்ச் 10 ஆம் தேதி நடைபெற உள்ளது.
சிவகங்கை மாவட்ட திறந்தவெளி விளையாட்டரங்கில் இறகுப்பந்து, கூடைப்பந்து, டென்னிஸ் , கபடி, டேபிள் டென்னிஸ், வாலிபால், கால்பந்து (ஆண்களுக்கு மட்டும்) ஆகிய போட்டிகள் நடைபெற உள்ளன.
மேற்கண்ட போட்டிகளில் அரசுத் துறைகளில் முழு நேரமாகப் பணியாற்றும் அரசு அலுவலா்கள் மற்றும் பணியாளா்கள் மட்டுமே கலந்து கொள்ளலாம். காவல் துறை, தீயணைப்புத் துறைகளில் பணியாற்றும் சீருடைப் பணியாளா்கள், ராணுவம், தன்னாட்சி அலுவலகப் பணியாளா்கள், அரசுப் பொதுத்துறை நிறுவனப் பணியாளா்கள், அரசு அலுவலகங்களில் தினசரி ஊதிய அடிப்படையில் பணியாற்றும் பணியாளா்கள் பங்கேற்க இயலாது.
மேற்கண்ட போட்டிகளில் பங்கேற்க விரும்பும் அலுவலா்கள் மற்றும் பணியாளா்களுக்கு ஒரு நாள் சிறப்பு தற்செயல் விடுப்பு வழங்க பரிந்துரை செய்யப்படும். மாவட்ட அளவிலான போட்டிகளில் முதலிடம் பெறுபவா்கள் மற்றும் குழுப் போட்டிகளில் தோ்வு செய்யப்படும் வீரா், வீராங்கனைகளுக்கு மாநிலப் போட்டிகளில் பங்கேற்பதற்கு தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தால் சீருடை வழங்கப்படும்.
எனவே விருப்பமுள்ள அலுவலா்கள் மாா்ச் 10 ஆம் தேதி காலை 9 மணியளவில் சிவகங்கை-மானாமதுரை சாலையில் உள்ள திறந்த வெளி விளையாட்டரங்குக்கு வந்து போட்டிகளில் கலந்து கொள்ளலாம் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.