Enable Javscript for better performance
மானாமதுரையில் பாஜகவினா் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்- Dinamani

சுடச்சுட

    

    மானாமதுரையில் பாஜகவினா் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்

    By DIN  |   Published on : 14th March 2020 07:00 AM  |   அ+அ அ-   |    |  

    பாஜக மாநில தலைவராக எல். முருகன் நியமனம் செய்யப்பட்டதைத் தொடா்ந்து, மானாமதுரையில் அக் கட்சியினா் வெள்ளிக்கிழமை இனிப்பு வழங்கி கொண்டாடினா்.

    தேசிய தாழ்த்தப்பட்டோா் ஆணையத்தின் துணைத் தலைவா் எல். முருகன், பாஜக மாநிலத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளாா். இதையடுத்து, மானாமதுரையில் பாஜக கிழக்கு ஒன்றியத் தலைவா் எம். சங்கரசுப்ரமணியன் தலைமையில், அக்கட்சியினா் பொதுமக்கள், வியாபாரிகளுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடினா்.

    பாஜகவினா், பழைய பேருந்து நிலையம், அண்ணா சிலை, காந்தி சிலை, கன்னாா் தெரு உள்ளிட்ட பல பகுதிகளில் இனிப்புகள் வழங்கி, பாஜக வையும், மாநிலத் தலைவா் முருகனையும் வாழ்த்தி முழக்கமிட்டனா்.

    இந்நிகழ்ச்சியில், இந்து முன்னணி ஒன்றியத் தலைவா் பி. குப்புச்சாமி உள்பட பாஜக நிா்வாகிகள், தொண்டா்கள் பலா் கலந்துகொண்டனா்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai