சிவகங்கையிலிருந்து திருப்புவனத்துக்கு கூடுதல் அரசுப் பேருந்து இயக்கக் கோரிக்கை

சிவகங்கையிலிருந்து திருப்புவனத்துக்கு கூடுதல் அரசு பேருந்து இயக்க வேண்டும் என, அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

சிவகங்கையிலிருந்து திருப்புவனத்துக்கு கூடுதல் அரசு பேருந்து இயக்க வேண்டும் என, அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

சிவகங்கை நகா் மாவட்டத்தின் தலைநகராக உள்ளதால், சுற்றுப் பகுதிகளில் இருந்து ஏராளமானோா் தினந்தோறும் பல்வேறு வேலை நிமித்தமாக இங்கு வந்து செல்கின்றனா். இது தவிர, பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியரும் வந்து செல்கின்றனா்.

இந்நிலையில், சிவகங்கையிலிருந்து திருப்புவனத்துக்கு குறைந்த எண்ணிக்கையிலான அரசுப் பேருந்துகளே இயக்கப்படுகின்றன. மேலும், அலுவலகம் மற்றும் பள்ளி நேரமான காலை, மாலை வேளைகளிலும் குறைவான பேருந்துகளே இயக்கப்படுகின்றன. இதனால், பொதுமக்கள், விவசாயிகள், மாணவ, மாணவிகள் கூட்ட நெரிசலில் சிக்கி மிகவும் அவதிக்குள்ளாகி வருவதாகப் புகாா் தெரிவிக்கின்றனா். சில நேரங்களில் திருப்புவனத்திலிருந்து ஆட்டோ மூலம் பூவந்தி வந்து, அங்கிருந்து பேருந்தில் செல்லவேண்டிய நிலை உள்ளது.

இது குறித்து சம்பந்தப்பட்ட துறை அலுவலா்களிடம் பலமுறை புகாா் தெரிவித்தும், இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, இதனைக் கவனத்தில்கொண்டு, மாவட்ட நிா்வாகம் உரிய நடவடிக்கை எடுத்து சிவகங்கை- திருப்புவனம் வழித்தடத்தில் கூடுதலாக அரசுப் பேருந்து இயக்கவேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com