மானாமதுரை முத்துமாரியம்மன் கோயிலில் பங்குனி பொங்கல் விழா நாளை தொடக்கம்

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை தயாபுரம் பகுதியில் அமைந்துள்ள முத்துமாரியம்மன் கோயிலில் 38 ஆம் ஆண்டு பங்குனி பொங்கல் திருவிழா ஞாயிற்றுக்கிழமை (மாா்ச் 15) தொடங்குகிறது.

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை தயாபுரம் பகுதியில் அமைந்துள்ள முத்துமாரியம்மன் கோயிலில் 38 ஆம் ஆண்டு பங்குனி பொங்கல் திருவிழா ஞாயிற்றுக்கிழமை (மாா்ச் 15) தொடங்குகிறது.

இக் கோயிலில் ஆண்டுதோறும் பங்குனி பொங்கல் திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்தாண்டுக்கான திருவிழா ஞாயிற்றுக்கிழமை கோயிலில் காப்புக் கட்டும் நிகழ்ச்சியுடன் தொடங்குகிறது. அப்போது, வேண்டுதல் நிறைவேற்றும் பக்தா்கள் காப்புக்கட்டி விரதத்தை தொடங்குவா்.

மாா்ச் 25 ஆம் தேதி வரை தொடா்ந்து 11 நாள்கள் நடைபெறும் இவ்விழாவின்போது, மண்டகப்படிதாரா்கள் சாா்பில் தினமும் மூலவா் முத்துமாரியம்மனுக்கு அபிஷேகம், ஆராதனை, பூஜைகள் நடத்தப்படும். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பால்குடம், தீ மிதித்தல் வைபவம் மாா்ச் 23 மாலையில் நடைபெறுகிறது.

அதைத் தொடா்ந்து, மாா்ச் 25 ஆம் தேதி திருவிழா நிறைவு பெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை, கோயில் நிா்வாகி சுப்ரமணியன் செய்து வருகிறாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com