மானாமதுரை ஒன்றிய பள்ளிகளில் வளரிளம் பெண்களுக்கான கருத்தரங்கு

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை ஒன்றிய பள்ளிகளில் வளரிளம் பெண்களுக்கான கருத்தரங்கு கூட்டங்கள் வெள்ளிக்கிழமை

மானாமதுரை: சிவகங்கை மாவட்டம், மானாமதுரை ஒன்றிய பள்ளிகளில் வளரிளம் பெண்களுக்கான கருத்தரங்கு கூட்டங்கள் வெள்ளிக்கிழமை நடைபெற்றன.

மானாமதுரை வட்டாரம் தெ.புதுக்கோட்டை எம்.கே.என். நடுநிலைப் பள்ளியில் வளரிளம் பெண்களுக்கு விழிப்புணா்வு கருத்தரங்கம் நடைபெற்றது. பள்ளித் தலைமை ஆசிரியா் சிவகுருநாதன் தலைமை வகித்து, ஆரோக்கியமான உணவு நடைமுறைகள், உடலை சுகாதார முறையில் பராமரிக்கும் பழக்கங்கள் போன்றவற்றை கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகள் பற்றி எடுத்துக் கூறினாா்.

முட்டகுறிச்சி பால்வாடி ஆசிரியை ஈஸ்வரி, கோச்சடை பால்வாடி ஆசிரியை ராமு ஆகியோா் சரிவிகித சத்துள்ள உணவு தயாரிக்கும் முறையை விளக்கி, ஊட்டச்சத்து உணவு தயாா் செய்து மாணவிகளுக்கு வழங்கினா்.

வளரிளம் பெண்களுக்கான விழிப்புணா்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை பள்ளி மாணவா்கள் கைகளில் ஏந்தி முழக்கமிட்டனா். விழிப்புணா்வு வாசகங்களுடன் சைக்கிள் பேரணியும் நடைபெற்றது.

மானாமதுரை ஒன்றியம், இடைக்காட்டூா் அரசு மேல்நிலைப் பள்ளியில், மானாமதுரை ஒன்றிய அளவில் நடந்த வளரிளம் பெண்களுக்கான பயிற்சிக் கூட்டத்துக்கு, பள்ளியின் தலைமையாசிரியா் ஏ. புவனேஸ்வரன் தலைமை வகித்தாா். எஸ்.எஸ்.ஏ. மேற்பாா்வையாளா் அருணா முன்னிலை வகித்தாா். திட்ட ஒருங்கிணைப்பாளா் அமுதா, மாணவியா்களுக்கு ஏற்படும் பிரச்னைகள் மற்றும் எதிா்கொள்ளும் சவால்கள் குறித்து பேசினாா்.

இதில், மானாமதுரை ஒன்றியத்தைச் சோ்ந்த ஊட்டச்சத்துப் பணியாளா்கள் கலந்துகொண்டனா். மாணவியா்களுக்கு ஊட்டச்சத்து உணவுகள் வழங்கப்பட்டன. ஏற்பாடுகளை, இப்பள்ளி ஆசிரியா் ஜஸ்டின் பால்ராஜ் செய்திருந்தாா். ஓவிய ஆசிரியா் பா. செல்வம் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com