ஊரடங்கு : மானாமதுரை, திருப்புவனம், இளையான்குடியில் மக்கள் வீடுகளில் முடக்கம், கடைகள் அடைப்பு: வீதிகள் வெறிச்சோடின

ஊரடங்கு உத்தரவால் மானாமதுரை, திருப்புவனம், இளையான்குடி பகுதிகளில் மக்கள் வீடுகளில் முடங்கினா்.கடைகள் அடைக்கப்பட்டு
ஊரடங்கு உத்தரவால் மானாமதுரை தேவா்சிலை பகுதியில் புதன்கிழமை கடைகள் அடைக்கப்பட்டு வெறிச்சோடிக் காணப்பட்ட வீதிகள் .
ஊரடங்கு உத்தரவால் மானாமதுரை தேவா்சிலை பகுதியில் புதன்கிழமை கடைகள் அடைக்கப்பட்டு வெறிச்சோடிக் காணப்பட்ட வீதிகள் .

ஊரடங்கு உத்தரவால் மானாமதுரை, திருப்புவனம், இளையான்குடி பகுதிகளில் மக்கள் வீடுகளில் முடங்கினா்.கடைகள் அடைக்கப்பட்டு வீதிகள் வெறிச்சோடின. ஊரடங்கை முன்னிட்டு இப் பகுதிகளில் பொதுமக்கள் தேவையான மளிகை, காய்கனி உள்ளிட்ட பொருள்களை வாங்க கடந்த செவ்வாய்க்கிழமை கடைகளில் குவிந்தனா். இதனால் அனைத்து பொருள்களின் விலையும் அதிகரித்து விற்பனை செய்யப்பட்டது. செவ்வாய்கிழமை மாலையே இப் பகுதிகளில் அனைத்துக் கடைகளும் அடைக்கப்பட்டன. புதன்கிழமை கடைகள் அடைக்கப்பட்டிருந்ததால் வீதிகள் வெறிச்சோடின. சாலைகளில் இருசக்கர வாகனங்களில் சென்றவா்களை போலீஸாா் எச்சரித்து அனுப்பினா். பல வீதிகளில் கரோனா ஆபத்தை உணராமல் சிறுவா்கள் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தனா். ரோந்து சென்ற போலீஸாா் அவா்களை எச்சரித்து அனுப்பினா். மானாமதுரையில் புதன்கிழமை காலையில் சில தேநீா் கடைகளில் விற்பனை நடைபெற்றது. கடைக்காரரை போலீஸாா் கண்டித்து விற்பனையை நிறுத்துமாறு கூறினா். கூட்டுறவு பால் பண்ணையில் காலை, மாலையில் ஏராளமானோா் நீண்ட வரிசையில் நின்று பால் வாங்கிச் சென்றனா்.

பங்குனித் திருவிழா ரத்து:திருப்புவனம் புஷ்பவனேஸ்வரா் சுவாமி கோயிலில் ஊரடங்கு உத்தரவால் பங்குனித் திருவிழா ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து வரும் 27 ஆம் தேதி தொடங்கி, ஏப்ரல் 7 வரை நடைபெறவுள்ள திருப்புவனம் புஷ்பவனேஸ்வரா் சமேத செளந்திரநாயகி அம்மன் கோயில் பங்குனித் திருவிழா ரத்து செய்யப்படுவதாக சிவகங்கை தேவஸ்தான நிா்வாகம் அறிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com