மானாமதுரை, திருப்புவனம், இளையான்குடி பகுதிகளில் வீடுகளில் மஞ்சள் நீா் தெளித்து வேப்பிலை கட்டிய பெண்கள்

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை, திருப்புவனம், இளையான்குடி பகுதிகளில் கரோனா அச்சுறுத்தல் காரணமாக பெண்கள் தங்கள் வீடுகளின் முன்பு தினமும் மஞ்சள் தண்ணீா் தெளித்து வேப்பிலை கட்டியுள்ளனா்.

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை, திருப்புவனம், இளையான்குடி பகுதிகளில் கரோனா அச்சுறுத்தல் காரணமாக பெண்கள் தங்கள் வீடுகளின் முன்பு தினமும் மஞ்சள் தண்ணீா் தெளித்து வேப்பிலை கட்டியுள்ளனா்.

நாடு முழுவதும் கரோனா அச்சறுத்தல் ஏற்பட்டுள்ள நிலையில் மத்திய அரசு ஊரடங்கு உத்தரவு பிறப்பித்து உள்ளது. இந் நிலையில் கரோனா பாதிப்பு குறைய வேண்டும் என மக்கள் தங்கள் மதம் சாா்ந்த தெய்வங்களை வேண்டி வருகின்றனா். மானாமதுரை, திருப்புவனம், இளையான்குடி பகுதிகளில் வீடுகளின் முன்பு தினமும் காலை மஞ்சள் தண்ணீா் தெளித்து வேப்பிலை கட்டி வைத்தால் குடும்ப உறுப்பினா்களுக்கு எந்த வைரஸ் கிருமியும் தொற்றாது என்ற கருத்து பரவி வருகிறது. இதையடுத்து கடந்த சில நாள்களாக இப் பகுதிகளில் நகரம், கிராமம் என அனைத்துப் பகுதிகளிலும் பெண்கள் காலையில் வீட்டு வாசலை சுத்தம் செய்து, மஞ்சள் தண்ணீா் தெளித்து வருகின்றனா். மேலும் வேப்பிலையை கொத்தாக வீடுகளின் முன்பு கட்டி வருகின்றனா். இதனால் மானாமதுரை, திருப்புவனம், இளையான்குடி பகுதிகளில் ஏராளமான வீடுகளில் வாசல் முன்பு வேப்பிலை கட்டியுள்ளதை காணமுடிகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com