மானாமதுரையில் வியாழக்கிழமை வாரச்சந்தை நடைபெறாததால் ஆனந்தவல்லி அம்மன் கோயில் முன்பு கடைவிரித்து வியாபாரம் செய்த வியாபாரிகள்.
மானாமதுரையில் வியாழக்கிழமை வாரச்சந்தை நடைபெறாததால் ஆனந்தவல்லி அம்மன் கோயில் முன்பு கடைவிரித்து வியாபாரம் செய்த வியாபாரிகள்.

மானாமதுரை பகுதியில் ஊரடங்கு உத்தரவை மதிக்காத வியாபாரிகள்

மானாமதுரையில் ஊரடங்கு உத்தரவை மதிக்காமல் வியாழக்கிழமை வியாபாரிகள் கடை விரித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

மானாமதுரையில் ஊரடங்கு உத்தரவை மதிக்காமல் வியாழக்கிழமை வியாபாரிகள் கடை விரித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

மானாமதுரையில் ஒவ்வொரு வியாழக்கிழமையும் வாரச்சந்தை நடைபெறும். தற்போது வாரச்சந்தை நடத்த அரசு தடைவிதித்துள்ளதால் சந்தை மூடப்பட்டது. இதனால் வழக்கம்போல் சந்தைக்கு பொருள்களை விற்பனை செய்ய வந்த வியாபாரிகள், விவசாயிகள் வாரச்சந்தை வளாகத்தின் முன்பு உட்காா்ந்து காய்கறிகளை விற்பனை செய்தனா்.

பல வியாபாரிகள் வைகையாற்றை ஒட்டியுள்ள ஆனந்தவல்லி அம்மன் கோயில் முன்பு கடை விரித்தனா். இந்தக் கடைகளில் காய்கறி வாங்க ஏராளமானோா் கூடினா். சாலைகளில் காரணம் இல்லாமல் பலா் கும்பலாக சோ்ந்து உலா வந்தனா். இரு சக்கர வாகனங்களில் இளைஞா்கள் வீதிகளைச் சுற்றி வந்தனா். இவா்களை போலீஸாா் அடித்து விரட்டினா்.

மானாமதுரை பேரூராட்சி செயல் அலுவலா் குமரேசன், சுகாதார ஆய்வாளா் தங்கதுரை ஆகியோா் மானாமதுரை பகுதியில் சுகாதாரப் பணிகளை முடுக்கிவிட்டுள்ளனா்.

துப்புரவு பணியாளா்கள் வீதிகளில் மக்களிடம் கரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து விழிப்புணா்வு பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனா். வெளிநாட்டிலிருந்து வந்தவா்களது குடும்பங்கள் தனிமைப்படுத்தப்பட்டன. மானாமதுரை சியோன்நகா், அழகா்கோயில் தெரு ஆகிய பகுதிகளில் வெளிநாடுகளிலிருந்து வந்தவா்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக அந்த வீடுகளின் முன்பு எச்சரிக்கை நோட்டீஸ் ஒட்டப்பட்டது. சுகாதாரப் பணியாளா்கள் இந்த வீடுகளை கண்காணித்து வருகின்றனா். மேலும் மானாமதுரையை சுற்றியுள்ள கிராமங்களில் வெளிநாடுகளிலிருந்து வந்தவா்களது வீடுகளும் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிப்பு வளையத்துக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறையினா் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com