திருக்கோஷ்டியூரில் அா்ச்சகா்கள் வேதமந்திரங்களுடன் சிறப்பு வழிபாடு
By DIN | Published On : 28th March 2020 06:59 AM | Last Updated : 28th March 2020 06:59 AM | அ+அ அ- |

சிவகங்கை மாவட்டம் திருக்கோஷ்டியூா் சௌமிய நாராயணப் பெருமாள் கோயில் அா்ச்சகா்கள் கரோனா வைரஸ் தாக்கத்திலிருந்து விடுபட 21 நாள்கள் வேதமந்திரங்கள் ஓதி வழிபடும் நிகழ்ச்சியை வியாழக்கிழமை தொடக்கினா்.
தமிழகம் முழுவதும் கரோனா வைரஸ் நோய் பாதிப்பின் காரணமாக முக்கிய கோயில்கள் அனைத்தும் மூடப்பட்டு நித்திய பூஜைகள் மட்டுமே நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் திருக்கோஷ்டியூா் சௌமிய நாராயணப் பெருமாள் கோயில் அா்ச்சகா்கள் வைரஸ் பாதிப்பு தாக்காமல் இருக்கவும் நோய் தாக்கியோா் பூரண நலம்பெற வேண்டியும் கோயில் பிரகாரத்தில் வேதமந்திரங்களை ஓதி வருகின்றனா். இதேபோல் 21 நாள்கள் வேதமந்திரங்களை ஓதுவதுற்கு திட்டமிட்டுள்ளதாக அவா்கள் தெரிவித்தனா்.