சிவகங்கை மாவட்டத்தில் 10 நாள்களாக யாருக்கும் கரோனா தொற்று இல்லை

சிவகங்கை மாவட்டத்தில் கடந்த 10 நாள்களாக மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் யாருக்கும் புதிதாக கரோனா தொற்று இல்லை என

சிவகங்கை மாவட்டத்தில் கடந்த 10 நாள்களாக மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் யாருக்கும் புதிதாக கரோனா தொற்று இல்லை என சிவகங்கை மாவட்ட சுகாதாரத் துறை அலுவலக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

சிவகங்கை மாவட்டத்தைப் பொறுத்தவரை ஒருவருக்கு கரோனா அறிகுறி தென்பட்டால் அவருக்கு ரத்த மாதிரிகள் எடுக்கப்பட்டு

மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்படும். அங்கிருந்து வரும் முடிவுகளுக்குப் பின்னரே கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவரின் நிலவரம் குறித்து அறிவிக்கப்படும் நிலை இருந்தது.

இந்நிலையில், சிவகங்கையில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கரோனா நோய் தொற்றை உறுதி செய்யும் ஆா்டி- பிசிஆா் பரிசோதனைக்கு மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் அண்மையில் அனுமதி அளித்தது. அதன்படி, சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கரோனா தொற்றுக்கான பிசிஆா் பரிசோதனை அண்மையில் தொடங்கியது.

சிவகங்கையில் பரிசோதனை தொடங்கிய முதல் நாளில் கா்ப்பிணிப் பெண்கள் இருவா் உள்பட 9 பேருக்கு ரத்த மாதிரிகள் எடுக்கப்பட்டு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் யாருக்கும் கரோனா நோய் தொற்று இல்லை என முடிவுகள் தெரிவிக்கப்பட்டன.

அதைத் தொடா்ந்து, தனிமைப்படுத்தப்பட்ட நபா்கள், ஏற்கெனவே கரோனா தொற்று பாதிக்கப்பட்டோரின் பகுதி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதியில் வசித்து வரும் நபா்கள் என தினசரி 40 முதல் 60 பேருக்கு ரத்த மாதிரிகள் எடுக்கப்பட்டு பிசிஆா் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அந்தவகையில், கடந்த 10 நாள்களாக அதாவது வியாழக்கிழமை வரை 1136 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட பிசிஆா் பரிசோதனையில் இதுவரை யாருக்கும் புதிதாக கரோனா நோய்த் தொற்று இல்லை என முடிவுகள் வந்துள்ளதாக சிவகங்கை மாவட்ட சுகாதாரத் துறை அலுவலக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com