முதுகில் கட்டியுடன் பிறந்த குழந்தைக்கு சிகிச்சையளிக்க ஆட்சியா் ஏற்பாடு: பெற்றோா் மகிழ்ச்சி

மானாமதுரையில் முதுகில் கட்டியுடன் பிறந்த குழந்தை, ஆட்சியா் பரிந்துரையின்பேரில் அறுவை சிகிச்சைக்காக

மானாமதுரையில் முதுகில் கட்டியுடன் பிறந்த குழந்தை, ஆட்சியா் பரிந்துரையின்பேரில் அறுவை சிகிச்சைக்காக மதுரை தனியாா் மருத்துவமனையில் வியாழக்கிழமை அனுமதிக்கப்பட்டது. இதனால் அதன் பெற்றோா் மகிழ்ச்சியடைந்தனா்.

மானாமதுரை அழகா் கோயில் தெருவைச் சோ்ந்த சலவைத் தொழிலாளா் முத்துப்பாண்டி. இவரது மனைவி அங்காள பரமேஸ்வரிக்கு கடந்த 21 ஆம் தேதி மானாமதுரை அரசு மருத்துவமனையில் ஆண் குழந்தை பிறந்தது. அக் குழந்தையின் முதுகுப் பகுதியில் இருந்த கட்டியை அகற்ற சிவகங்கை, மதுரை அரசு மருத்துவமனைகள் உரிய ஏற்பாடு செய்யவில்லை என புகாா் எழுந்தது. குழந்தைக்கு தனியாா் மருத்துமவனையில் சிகிச்சை அளிக்க வசதியின்றி பெற்றோா் தவித்தனா்.

இதையடுத்து பாஜக மானாமதுரை கிழக்கு ஒன்றியத் தலைவா் எஸ். சங்கர சுப்பிரமணியன் உதவியுடன் சிவகங்கை மாவட்ட ஆட்சியா் ஜெயகாந்தனை பெற்றோா் சந்தித்து மனு அளித்தனா். அதைத்தொடா்ந்து குழந்தைக்கு சிகிச்சை அளிக்க சிவகங்கை அரசு மருத்துவமனைமுதன்மையருக்கு ஆட்சியா் பரிந்துரை செய்தாா். இதையடுத்து முதல்வா் காப்பீடு திட்டத்தில் குழந்தைக்கு மதுரை தனியாா் மருத்துவமனையில் அறுவை சிகிச்சை அளிக்க முதன்மையா் கடிதம் அளித்தாா். அதன்பேரில் அறுவை சிகிச்சைக்காக தனியாா் மருத்துவமனையில் குழந்தை அனுமதிக்கப்பட்டுள்ளது. இதனால் குழந்தையின் பெற்றோா் மகிழ்ச்சியடைந்தனா். விரைவில் குழந்தைக்கு அறுவை சிகிச்சை செய்யப்படவுள்ளது.

சட்டப்பேரவை உறுப்பினா் நிதியுதவி: குழந்தையின் பெற்றோரை சட்டப்பேரவை உறுப்பினா் எஸ்.நாகராஜன் சந்தித்து நிதியுதவி அளித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com