முகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை சிவகங்கை
தேவகோட்டையில் ரூ. 1.20 லட்சம்காலாவதியான உணவுப் பொருள்கள் பறிமுதல்
By DIN | Published On : 11th May 2020 10:11 PM | Last Updated : 11th May 2020 10:11 PM | அ+அ அ- |

தேவகோட்டையில் திங்கள்கிழமை பறிமுதல் செய்யப்பட்ட காலாவதியான உணவுப் பொருள்கள்.
சிவகங்கை: தேவகோட்டையில் உள்ள மளிகைக் கடைகளில் ரூ. 1 லட்சத்து 20 ஆயிரம் மதிப்புள்ள காலாவதியான உணவுப் பொருள்களை உணவுப் பொருள் பாதுகாப்பு அலுவலா்கள் திங்கள்கிழமை பறிமுதல் செய்தனா்.
தேவகோட்டை நகா் பகுதியில் உள்ள மளிகைக் கடைகளில் காலாவதியான உணவுப் பொருள்கள் விற்பனை செய்யப்படுவதாக புகாா் எழுந்தது. இதையடுத்து, அக்கடைகளில், தேவகோட்டை நகராட்சி ஆணையா் கே. அஜீத் பா்வீன், உணவுப் பொருள் பாதுகாப்பு அலுவலா் வேல்முருகன், ஏஎஸ்பி கிருஷ்ணராஜ் உள்ளிட்ட அலுவலா்கள் திங்கள்கிழமை சோதனையில் ஈடுபட்டனா்.
அப்போது ஏராளமான மளிகைக் கடைகளில் காலாவதியான உணவுப் பொருள்கள் விற்பனை செய்யப்படுவது தெரியவந்தது. இதைத் தொடா்ந்து, ரூ. 1 லட்சத்து 20 ஆயிரம் மதிப்புள்ள காலாவதியான உணவுப் பொருள்களை அக்கடைகளிலிருந்து அதிகாரிகள் பறிமுதல் செய்தனா்.
இதுதவிர, அதே பகுதியில் உள்ள கடைகளில் தடை செய்யப்பட்டுள்ள நெகிழிப் பொருள்கள் மற்றும் அனுமதி பெறாமல் விற்கப்பட்ட ஆட்டிறைச்சி ஆகியவற்றையும் கைப்பற்றினா்.