மானாமதுரையில் வைகை ஆற்றுக்குள் வாரச் சந்தை மாற்றம்

சிவகங்கை மாவட்டம், மானாமதுரையில் வாரச் சந்தை வியாழக்கிழமை வைகை ஆற்றுக்குள் மாற்றப்பட்டது.

சிவகங்கை மாவட்டம், மானாமதுரையில் வாரச் சந்தை வியாழக்கிழமை வைகை ஆற்றுக்குள் மாற்றப்பட்டது.

மானாமதுரையில் வியாழக்கிழமைதோறும் வாரச் சந்தை நடைபெறுகிறது. பொது முடக்கம் காரணமாக, பேரூராட்சி நிா்வாகம் சாா்பில் வாரச் சந்தை வளாகம் மூடப்பட்டது. இதனால், வாரச் சந்தைக்கு காய்கனி உள்ளிட்ட விளைபொருள்கள் விற்பனை செய்ய வந்த விவசாயிகள், வியாபாரிகள் நகரின் பல்வேறு இடங்களில் கடைவிரித்து வியாபாரம் செய்து வந்தனா்.

தற்போது, பொது முடக்க உத்தரவில் சில தளா்வுகள் ஏற்படுத்தப்பட்ட நிலையில், இந்த வாரம் மானாமதுரை வைகை ஆற்றுக்குள் வாரச் சந்தை கடைகள் அமைக்க போலீஸாா் அனுமதி அளித்தனா். அதன்பேரில், வியாபாரிகள் சோணையா சுவாமி கோயில் முதல் ஆனந்தவல்லி அம்மன் கோயில் வரை வைகை ஆற்றுச் சாலையின் இருபுறமும் கடைகள் அமைத்து வியாபரம் செய்தனா். வாரச் சந்தை வளாகம் மீண்டும் செயல்படும் வரை, வைகை ஆற்றுக்குள் வாரச் சந்தை நடத்த அனுமதிக்கப்பட்டால், நெருக்கடி இல்லாமல் வியாபாரம் செய்யமுடியும் என வியாபாரிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com