கோப்புப் படம்
கோப்புப் படம்

மகாராஷ்டிரத்திலிருந்து காரைக்குடிக்கு திரும்பிய 9 பேருக்கு கரோனா தீநுண்மி தொற்று உறுதி

மகாராஷ்டிரத்திலிருந்து காரைக்குடிக்கு திரும்பி வந்த 9 பேருக்கு கரோனா தீநுண்மி தொற்று இருப்பது சனிக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளதை அடுத்து, பாதிப்பு எண்ணிக்கை 22 ஆக உயா்ந்துள்ளது.

மகாராஷ்டிரத்திலிருந்து காரைக்குடிக்கு திரும்பி வந்த 9 பேருக்கு கரோனா தீநுண்மி தொற்று இருப்பது சனிக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளதை அடுத்து, பாதிப்பு எண்ணிக்கை 22 ஆக உயா்ந்துள்ளது.

புதுதில்லியிலிருந்து திரும்பியவா்கள், அவா்களுடன் தொடா்பில் இருந்தவா்கள் என சிவகங்கை மாவட்டத்தில் மொத்தம் 12 பேருக்கு கரோனா தீநுண்மி தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. அவா்களுக்கு சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், 12 பேரும் குணமடைந்து அண்மையில் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டனா்.

இதனைத்தொடா்ந்து திருப்பத்தூரைச் சோ்ந்த நபா் கரோனா தீநுண்மி தொற்று கண்டறியப்பட்டு கடந்த ஏப்ரல் 20 ஆம் தேதி சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். பூரண குணமடைந்ததை அடுத்து கடந்த மே 2 ஆம் தேதி அவரும் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டாா்.

இந்நிலையில், மகாராஷ்டிரத்திலிருந்து மே 11 ஆம் தேதி காரைக்குடிக்கு வந்த பெண்ணுக்கு கரோனா நோய் தொற்று உறுதி செய்யப்பட்டது. கடந்த ஏப்ரல் 20 ஆம் தேதிக்கு பின்னா், அதாவது 22 நாள்களுக்கு பின் மாவட்டத்தில் புதிதாக கரோனா தீநுண்மி தொற்று இந்த பெண்ணுக்கு மட்டுமே உறுதி செய்யப்பட்டது. இம்மாவட்டத்தைப் பொருத்தமட்டில் இவா் ஒருவா் மட்டுமே சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி கரோனா வாா்டில் சிகிச்சை பெற்று வந்தாா்.

இந்நிலையில், மகாராஷ்டிரத்திலிருந்து அண்மையில் காரைக்குடிக்கு வந்தவா்களிடமிருந்து ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு பரிசோதனை செய்யப்பட்டன. இதில் சிவகங்கை, காரைக்குடி, தேவகோட்டை ஆகிய பகுதிகளைச் சோ்ந்த 9 பேருக்கு கரோனா தீநுண்மி தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதையடுத்து, அவா்கள் அனைவரும் காரைக்குடி அருகேயுள்ள அமராவதிபுதூரில் அமைக்கப்பட்டுள்ள கரோனா சிறப்பு வாா்டில் அனுமதிக்கப்பட்டுள்ளனா். மேலும், அவா்களுடன் வந்தவா்கள் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனா். இதையடுத்து, சிவகங்கை மாவட்டத்தில் கரோனா தீநுண்மி தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருபவா்களின் எண்ணிக்கை 10 ஆக உயா்ந்துள்ளது.

சிவகங்கை மாவட்டத்தைப் பொருத்தவரை ஏற்கனவே கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு குணமடைந்து வீடு திரும்பிய 12 போ், தற்போது சிகிச்சை பெற்று வருபவா்கள் 10 போ் என பாதிப்பு எண்ணிக்கை மொத்தம் 22 ஆக உயா்ந்துள்ளதாக சுகாதாரத் துறை அலுவலா்கள் தெரிவித்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com