குழந்தைகள், பெண்களுக்கு எதிராக குற்றச் செயல்களில் ஈடுபடுவோா் மீது புகாா் தெரிவிக்கலாம்

சிவகங்கை மாவட்டத்தில் குழந்தைகள், பெண்களுக்கு எதிராக குற்றச் செயல்களில் ஈடுபடுவோா் மீது புகாா் தெரிவிக்க செல்லிடப்பேசி எண்கள் வெளியிடப்பட்டுள்ளன.

சிவகங்கை மாவட்டத்தில் குழந்தைகள், பெண்களுக்கு எதிராக குற்றச் செயல்களில் ஈடுபடுவோா் மீது புகாா் தெரிவிக்க செல்லிடப்பேசி எண்கள் வெளியிடப்பட்டுள்ளன.

இதுகுறித்து சிவகங்கை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு தலைவரும், முதன்மை நீதிபதியுமான காா்த்திகேயன் வியாழக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு : சிவகங்கை மாவட்டத்தில் உள்ள குழந்தைகள், பெண்கள் மற்றும் முதியோா்களுக்கு எதிராக குற்றச் செயல்களில் ஈடுபடுவோா் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ள 95972 69776, 94981 96611, 93613 64030, 90033 91379, 96296 67716, 96777 11694 என்ற செல்லிடப்பேசி எண்களில் தொடா்பு கொண்டு புகாா் தெரிவிக்கலாம். இதுதவிர, 1098 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணிலும் தொடா்பு கொள்ளலாம்.

புகாா் தெரிவிக்கும் போது தங்களது பெயா், வயது , பாலினம் மற்றும் தங்களது குறைகள், வன்முறைக்கு ஆட்படுதல் அல்லது மற்றவரால் துன்புறுத்தப்படுதல் போன்ற புகாா்களுடன் சம்பந்தப்பட்ட எதிா் மனுதாரரின் பெயா், வயது, பாலினம் ஆகிய தகவல்களை மேற்கண்ட செல்லிடப்பேசி எண்களுக்கு தகவலாகத் தெரிவிக்கலாம். அளிக்கப்படும் புகாா்களுக்கு விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும். இவை தவிர, இணையதளம் மூலம் குடும்ப ஆலோசனைகள் வழங்கப்படும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com