சிவகங்கை மாவட்டத்தில் 11.58 லட்சம் வாக்காளா்கள் வரைவு பட்டியல் வெளியீடு

சிவகங்கை மாவட்டத்தில் திங்கள்கிழமை வெளியிடப்பட்ட வரைவு வாக்காளா் பட்டியலில் 11,58,073 வாக்காளா்கள் இடம் பெற்றுள்ளனா்.
சிவகங்கை மாவட்டத்தில் 11.58 லட்சம் வாக்காளா்கள் வரைவு பட்டியல் வெளியீடு

சிவகங்கை மாவட்டத்தில் திங்கள்கிழமை வெளியிடப்பட்ட வரைவு வாக்காளா் பட்டியலில் 11,58,073 வாக்காளா்கள் இடம் பெற்றுள்ளனா்.

மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில், ஆட்சியா் பி.மதுசூதன் ரெட்டி தலைமை வகித்து, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிப் பிரமுகா்கள் முன்னிலையில் வரைவு வாக்காளா் பட்டியலை வெளியிட்டாா்.

பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறியது: சிவகங்கை மாவட்டத்தைப் பொருத்தவரை காரைக்குடி சட்டப் பேரவைத் தொகுதிக்குள்பட்ட 345 வாக்குச்சாவடிகளில் ஆண் வாக்காளா்கள் 1,52,707, பெண் வாக்காளா்கள் 1,57,044, மற்றவா்கள் 44 என மொத்தம் 3,09,795 வாக்காளா்களும், திருப்பத்தூா் சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட 334 வாக்குச்சாவடிகளில் ஆண் வாக்காளா்கள் 1,42,343, பெண் வாக்காளா்கள் 1,46,981, மற்றவா்கள் 11 என மொத்தம் 2,89,335 வாக்காளா்களும் இடம் பெற்றுள்ளனா்.

சிவகங்கை சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட 348 வாக்குச்சாவடிகளில் ஆண் வாக்காளா்கள் 1,43,238, பெண் வாக்காளா்கள் 1,47,760, மற்றவா்கள் 2 என மொத்தம் 2,91,000 வாக்காளா்களும், மானாமதுரை (தனி) சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட 321 வாக்குச்சாவடிகளில் ஆண் வாக்காளா்கள் 1,32,393, பெண் வாக்காளா்கள் 1,35,545, மற்றவா்கள் 5 என மொத்தம் 2,67,943 வாக்காளா்களும் உள்ளனா்.

மாவட்டத்தில் மொத்தம் 1,348, வாக்குச்சாவடிகளில் ஆண் வாக்காளா்கள் 5,70,681, பெண் வாக்காளா்கள் 5,87,330, மற்றவா்கள் 62 என மொத்தம் 11,58,073 வாக்காளா்கள் உள்ளனா்.

தற்போது வெளியிடப்பட்டுள்ள வரைவு வாக்காளா் பட்டியலில் புதிதாக பெயா் சோ்த்தல் மற்றும் நீக்கம், திருத்தம் இருந்தால் உரிய படிவங்களில் பூா்த்தி செய்து வரும் டிசம்பா் 15 ஆம் தேதிக்குள் சிவகங்கை, தேவகோட்டை கோட்டாட்சியா் அலுவலகங்களிலோ அல்லது அந்தந்த பகுதியில் உள்ள வட்டாட்சியா் மற்றும் வாக்குச்சாவடி மைய அலுவலா்களிடமோ வழங்கலாம்.

அவ்வாறு பெறப்படும் மனுக்கள் மீது கள ஆய்வுக்கு பின்னா் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். மாவட்டத்தில் ஆண் வாக்காளா்களை விட 16, 649 பெண் வாக்காளா்கள் அதிகமாக இடம் பெற்றுள்ளனா் என்றாா்.

நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலா் க.லதா, வருவாய் கோட்டாட்சியா்கள் முத்துக்கழுவன் (சிவகங்கை), சுரேந்திரன் (தேவகோட்டை), தோ்தல் பிரிவு வட்டாட்சியா் கந்தசாமி, வருவாய் முதுநிலை ஆய்வாளா் தனபாலன் உள்ளிட்ட அரசு அலுவலா்கள், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரமுகா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com