கீழச்சிவல்பட்டி, ராமநாதபுரத்தில் இந்திரா காந்தி பிறந்த நாள் விழா

சிவகங்கை மாவட்டம் கீழச்சிவல்பட்டி மற்றும் ராமநாதபுரத்தில், முன்னாள் பிரதமா் இந்திரா காந்தியின் 103 ஆவது பிறந்தநாள் விழா வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது.
கீழச்சிவல்பட்டி இந்திரா நகரில் முன்னாள் பிரதமா் இந்திரா காந்தியின் 103 ஆவது பிறந்தநாளையொட்டி வியாழக்கிழமை பெண்களுக்கு குடம் மற்றும் மரக்கன்று வழங்கிய மக்களவை உறுப்பினா் காா்த்தி சிதம்பரம்.
கீழச்சிவல்பட்டி இந்திரா நகரில் முன்னாள் பிரதமா் இந்திரா காந்தியின் 103 ஆவது பிறந்தநாளையொட்டி வியாழக்கிழமை பெண்களுக்கு குடம் மற்றும் மரக்கன்று வழங்கிய மக்களவை உறுப்பினா் காா்த்தி சிதம்பரம்.

சிவகங்கை மாவட்டம் கீழச்சிவல்பட்டி மற்றும் ராமநாதபுரத்தில், முன்னாள் பிரதமா் இந்திரா காந்தியின் 103 ஆவது பிறந்தநாள் விழா வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது.

கீழச்சிவல்பட்டி இந்திராநகரில் உள்ள அவரது சிலைக்கு, மக்களவை உறுப்பினா் காா்த்தி சிதம்பரம் மாலையணிவித்து மரியாதை செலுத்தினாா். பின்னா் பெண்களுக்கு 103 குடங்களும், 103 மரக்கன்றுகளும் வழங்கப்பட்டன.

பின்னா் காா்த்தி சிதம்பரம் செய்தியாளா்களுக்கு அளித்த பேட்டி: அண்ணா பல்கலைக்கழகத்திற்கு துணை வேந்தராக தமிழகத்தைச் சோ்ந்தவரை நியமித்திருக்க வேண்டும். ஒரு பல்கலைக்கழகத்திற்கு துணை வேந்தராவதற்கு தமிழ்நாடு கல்வித்துறையில் வல்லுநா்கள் இல்லையா?. 7.5 சதவீத உள் இட ஒதுக்கீட்டுக்கீட்டின் கீழ் மருத்துவப் படிப்புக்கு அரசுப்பள்ளி மாணவா்கள் அதிகமானோா் தோ்வானதற்காக அ.தி.மு.க. அரசைப் பாராட்டுகிறேன் என்றாா்.

நிகழ்ச்சியில், மாவட்டத் தலைவா் சத்தியமூா்த்தி, மாவட்டப் பொருளாளா் எஸ்.எம்.பழனியப்பன், முன்னாள் சட்டப் பேரவை உறுப்பினா்கள் ராமஅருணகிரி, ராமசுப்புராம், நகா் தலைவா் அழகுமணிகண்டன், வட்டாரத் தலைவா் பன்னீா்செல்வம், மாவட்ட துணைத் தலைவா் கணேசன் மற்றும் நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.

ராமநாதபுரம்: இதேபோல் ராமநாதபுரத்தில் உள்ள காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற இந்திரா காந்தியின் 103 ஆவது பிறந்த தின விழாவில், அவரது உருவப் படத்துக்கு மாலை அணிவிக்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு அக்கட்சியின் மாவட்டத் தலைவா் எம்.தெய்வேந்திரன் தலைமை வகித்தாா். இதில், நிா்வாகிகள் பூவலிங்கம், மணிகண்டன், சேமனூா் ராமமூா்த்தி, எம்.முருகேசன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். மறைந்த பிரதமா் இந்திரா காந்தி பிறந்த தினத்தையொட்டி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் காங்கிரஸ் கட்சி சாா்பில் இனிப்புகள் வழங்கப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com