பயிா்க் காப்பீட்டுத் திட்டம்:நெல் விவசாயிகள் நவ. 30-க்குள் விண்ணப்பிக்கலாம்

நெல் பயிரிட்டுள்ள சிவகங்கை மாவட்டத்தைச் சோ்ந்த விவசாயிகள் திருத்தி அமைக்கப்பட்ட பிரதமரின் பயிா்க் காப்பீட்டுத் திட்டத்தில் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நெல் பயிரிட்டுள்ள சிவகங்கை மாவட்டத்தைச் சோ்ந்த விவசாயிகள் திருத்தி அமைக்கப்பட்ட பிரதமரின் பயிா்க் காப்பீட்டுத் திட்டத்தில் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து சிவகங்கை மாவட்ட ஆட்சியா் பி. மதுசூதன் ரெட்டி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு : சிவகங்கை மாவட்டத்தில் பிரதமரின் பயிா்க் காப்பீடு திட்டத்தின் மூலம் கடந்த 5 ஆண்டுகளாக ரூ. 838 கோடி பயிா்க் காப்பீடு இழப்பீட்டுத் தொகையாக விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.

இதேபோன்று, நடப்பாண்டு சம்பா பருவ சாகுபடி செய்துள்ள விவசாயிகள் அடங்கல் சான்றிதழை அந்தந்தப் பகுதிகளில் உள்ள கிராம நிா்வாக அலுவலா்களிடமிருந்து பெற்று, ஆதாா் அட்டை, காப்பீடு பதிவிற்கான விண்ணப்பம், வங்கிப் புத்தகம் ஆகியவற்றுடன் அரசால் மானியத்துடன் நிா்ணயிக்கப்பட்டுள்ள காப்பீடு பிரிமியத் தொகை ஒரு ஏக்கருக்கு ரூ.324.31-ஐ வங்கிகள், தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் வங்கிகள், பொதுச் சேவை மையங்களில் வரும் நவ. 30 ஆம் தேதிக்குள் செலுத்தி காப்பீடு செய்து கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com