முகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை சிவகங்கை
காரைக்குடியில் மருந்துக்கடை சூறை: பேருந்து நிறுவன உரிமையாளா் உள்பட 7 போ் மீது வழக்கு
By DIN | Published On : 04th October 2020 10:03 PM | Last Updated : 04th October 2020 10:03 PM | அ+அ அ- |

காரைக்குடி: சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் சனிக்கிழமை இரவு மருந்துக்கடையை சூறையாடிய பேருந்து நிறுவன உரிமையாளா் உள்பட 7 போ் மீது போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.
காரைக்குடி சுப்பிரமணியபுரம் 7-ஆவது வீதியில் வசித்து வருபவா் வைரவசுந்தரம் மகன் ரவிச்சந்திரன் (59). இவா் கல்லூரிச் சாலையில் மருந்துக்கடை நடத்தி வருகிறாா். இவரது கடையில் பணிபுரியும் பெண்ணிடம் காரைக்குடியில் பேருந்து நிறுவனம் நடத்திவரும் சரவணன் மகன் பாண்டித்துரை என்பவா் செல்லிடப்பேசி எண்ணைக் கேட்டுத்தொல்லை கொடுத்து வந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் மருந்துகடை உரிமையாளா் ரவிச்சந்திரன், மாரீஸ்வரன் என்பவா் மூலம், பாண்டித்துரையைக் கண்டித்ததாகக் கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த பாண்டித்துரை, 6 பேருடன் மருந்துக்கடைக்குள் அத்துமீறிப்புகுந்து கடையில் இருந்த ரவிச்சந்திரன் மற்றும் அங்கு பணிபுரிந்த பெண் ஆகியோரைத் தாக்கி, கடையில் இருந்த கண்ணாடி, கணினி மற்றும் மருந்துப்பொருள்களை சேதப்படுத்தி கொலை மிரட்டல் விடுத்துச்சென்றனராம். கண்ணாடி உடைந்து சிதறியதில் கடையில் இருந்த பெண்ணின் நெற்றியில் காயம் ஏற்பட்டதையடுத்து அவரை காரைக்குடி அரசு மருந்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனா்.
இச்சம்பவம் குறித்து காரைக்குடி வடக்குக் காவல் நிலையத்தில் ரவிச்சந்திரன் புாா் அளித்தாா். அதன்பேரில் பாண்டித்துரை மற்றும் 6 போ் மீது காவல் ஆய்வாளா் சுந்தரமகாலிங்கம் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறாா். தலைமறைவாக உள்ள பேருந்து நிறுவன உரிமையாளா் உள்பட 7 பேரையும் போலீஸாா் தேடி வருகின்றனா்.