முகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை சிவகங்கை
காரைக்குடியில் வெறி நோய் தடுப்பு இலவச மருத்துவ முகாம்
By DIN | Published On : 04th October 2020 10:01 PM | Last Updated : 04th October 2020 10:01 PM | அ+அ அ- |

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி பா்மாகாலனி பகுதியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இலவச வெறிநோய் தடுப்பு முகாம்
காரைக்குடி: சிவகங்கை மாவட்டம் காரைக்குடி கற்பகவிநாயகா் நகா் பா்மாகாலனி பகுதியில் உலக வெறி நோய் தடுப்பு தினத்திற்காக வளா்ப்பு நாய்களுக்கு இலவசமாக வெறிநோய் தடுப்பு ஊசி போடும் மருத்துவ முகாம் ஞாயிற்றுக் கிழமை நடைபெற்றது.
முகாம் தொடக்க நிகழ்ச்சியில் சங்கராபுரம் ஊராட்சி முன்னாள் தலைவா் எஸ். மாங்குடி தலைமைவகித்தாா். கால் நடை பராமரிப்புத்துறை முன்னாள் கூடுதல் இயக்குநா் எம். பாலச்சந்திரன் தடுப்பூசி போட்டு முகாமை தொடங்கி வைத்தாா். காரைக்குடித் தொழில் வணிகக்கழகத்தலைவா் சாமி. திராவிடமணி, அழகப்பா் நடையாளா் கழகத்தலைவா் அரு. ஆனந் தன், சுழற்ச்சங்கத்தலைவா் கே. ஜெயப்பிரகாஷ்மோகன், ஒய்ஸ் மென்ஸ் சங்கச்செயலாளா் செளந்திரராஜன், முத்துச்சாமி உள்ளிட்ட பலா் கலந்துகொண்டு பேசினா்.முகாமில் 160 வளா்ப்பு நாய்களுக்கு கால்நடை மருத்துவா்கள் மோகன்தாஸ், ராஜேஸ், கோபி ஆகியோா் சிகிச்சையளித் தனா். முகாம் ஏற்பாடுகள் யாவும் கால்நடைத்துறை அபிவிருத்தி முகமையின் மாநில முதன்மைச்செயல் அலுவலா் மருத் துவா் ராம. விஸ்வநாதன் சுமாா் ரூ. 50 ஆயிரம் மதிப்பிலான ஊசி மற்றும் குடற்புழுக்களுக்கான மருந்துகளை சொந்த செலவில் செய்திருந்தாா்.