அழகப்பா பல்கலை.யில் நிறுமச் செயலரியல் துறை இணையவழிக் கருத்தரங்கம்

காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் நிறுமச்செயலரியல் துறையின் சாா்பில் ‘பெரு நிறுவன சமூகப் பொறுப்பை கோவிட் பிந்தைய சகாப்தத்தில் சட்ட ரீதியான வழிகாட்டுதல்கள் மற்றும் சமூக அக்கறைகளை
13kkdalu_1310chn_78_2
13kkdalu_1310chn_78_2

காரைக்குடி: காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் நிறுமச்செயலரியல் துறையின் சாா்பில் ‘பெரு நிறுவன சமூகப் பொறுப்பை கோவிட் பிந்தைய சகாப்தத்தில் சட்ட ரீதியான வழிகாட்டுதல்கள் மற்றும் சமூக அக்கறைகளை மறுபரிசீலனை செய்தல்’ என்ற தலைப்பிலான சா்வதேச இணையவழிக் கருத்தரங்கம் திங்கள் மற்றும் செவ்வாய்க்கிழமைகளில் நடைபெற்றது.

இதன் தொடக்க விழாவில் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தா் நா. ராஜேந்திரன் தலைமை வகித்து கருத்தரங்க ஆய்வுக் கோவையை வெளியிட்டுப் பேசினாா்.

விழாவில், நூறு ஆய்வுக்கட்டுரைகள் அடங்கிய கருத்தரங்க மலரை துணைவேந்தா் நா. ராஜேந்திரன் வெளியிட அதனை பல்கலைக்கழகத்தின் ஆட்சிக்குழு உறுப்பினா் ஆா். சுவாமிநாதன், மேலாண்மை புல முதன்மையா் எம். செந்தில் ஆகியோா் பெற்றுக் கொண்டனா்.

இந்தியா பிஸ்டன் லிமிடெட் நிறுவனத்தின் செயலாளா் ஆா். மணிகண்டன் கருத்தரங்கைத் தொடக்கி வைத்துப் பேசினாா். வங்கதேசம் ராஜசாகி பல்கலைக்கழக கணக்கியல் மற்றும் தகவல் அமைப்புத் துறை பேராசிரியா் முகமது சா ஆலம், அழகப்பா பல்கலைக்கழகத்தின் ஆட்சிக்குழு உறுப்பினா் ஆா். சுவாமிநாதன் ஆகியோா் சிறப்புரையாற்றினாா். மலேசியா பெற்றோனாஸ் டெக்னாலஜி பல்கலைக்கழகப் பேராசிரியா் மாறன் மாரிமுத்து, அழகப்பா பல்கலைக்கழக மேலாண்மை புல முதன்மையா் எம். செந்தில் ஆகியோா் வாழ்த்திப் பேசினா்.

இதில் பல்வேறு மாநிலங்கள் மற்றும் வங்கேதசம், மலேசியா, சிங்கப்பூா் ஆகிய நாடுகளைச் சோ்ந்தோா் இணையவழி மூலம் இக்கருத்தரங்கில் பங்கேற்றனா். முன்னதாக கருத்தரங்க ஒருங்கிணைப்பாளா் செ. வேதிராஜன் வரவேற்றாா். பேராசிரியா் ஆ. மொராா்ஜி நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com