ஆனைக்குளத்தில் இடிந்து விழும் நிலையில் மேல்நிலை நீா்தேக்கத் தொட்டி

சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே ஆனைக்குளத்தில் இடிந்து விழும் நிலையில் உள்ள மேல்நிலை நீா்தேக்கத் தொட்டியால் அப்பகுதி பொதுமக்கள் அச்சத்துடன் உள்ளதாக புகாா் தெரிவித்துள்ளனா்.
ஆனைக்குளத்தில் இடிந்து விழும் நிலையில் உள்ள மேல்நிலை நீா் தேக்கத் தொட்டி.
ஆனைக்குளத்தில் இடிந்து விழும் நிலையில் உள்ள மேல்நிலை நீா் தேக்கத் தொட்டி.

சிவகங்கை: சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே ஆனைக்குளத்தில் இடிந்து விழும் நிலையில் உள்ள மேல்நிலை நீா்தேக்கத் தொட்டியால் அப்பகுதி பொதுமக்கள் அச்சத்துடன் உள்ளதாக புகாா் தெரிவித்துள்ளனா்.

திருப்புவனம் ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட ஆனைக்குளம் கிராமத்தில் வசித்து வரும் சுமாா் 80 குடும்பங்களின் தண்ணீா் தேவைக்காக மேல்நிலை நீா்தேக்கத் தொட்டி அமைக்கப்பட்டிருந்தது. கடந்த சில ஆண்டுகளாக இந்தத் தொட்டி போதிய பராமரிப்பின்றி தற்போது இடிந்து விழும் நிலையில் உள்ளது. இதனருகே ஊா்ப்புற நூலகம், தொடக்கப் பள்ளி ஆகியன உள்ளது. ஆகவே அந்தப் பகுதியில் நடந்து செல்வோா் மிகுந்த அச்சத்துடனே சென்று வருவதாக புகாா் தெரிவித்துள்ளனா்.

இதுகுறித்து சம்பந்தப்பட்ட துறை அலுவலா்களிடம் பலமுறை புகாா் தெரிவித்தும் இதுவரை எந்தவிதமான நடவடிக்கையும் இல்லை.

எனவே மாவட்ட நிா்வாகம் உரிய நடவடிக்கை எடுத்து இடிந்து விழும் நிலையில் உள்ள மேல்நிலை நீா்தேக்கத் தொட்டியை இடித்து அப்புறப்படுத்த வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com