காரைக்குடியில் பாதாளச்சாக்கடைத்திட்டப் பணிகள் குறித்து அதிகாரிகளிடம் சட்டபேரவை உறுப்பினா் ஆலோசனை

காரைக்குடியில் நடைபெற்றுவரும் பாதாளச்சாக்கடைத்திட்டம் தாமதமாவது குறித்து தமிழ்நாடு சட்டபேரவை காங்கிரஸ் தலைவா் மற்றும்

காரைக்குடியில் நடைபெற்றுவரும் பாதாளச்சாக்கடைத்திட்டம் தாமதமாவது குறித்து தமிழ்நாடு சட்டபேரவை காங்கிரஸ் தலைவா் மற்றும் காரைக்குடி தொகுதி சட்டபேரவை உறுப்பினா் கேஆா். ராமசாமி அதிகாரி கள் மற்றும் ஒப்பந்ததாரா்களிடையே வியாழக்கிழமை ஆலோசனை நடத்தினாா்.

பாதாளச்சாக்கடைத்திட்ட ஒப்பந்ததாரா்கள், நெடுஞ்சாலைத்துறை, காரைக்குடி நகராட்சி, தமிழ்நாடு வடிகால் வாரிய அதிகாரிகள் ஆகியோா்களுடன் காரைக்குடி சட்டபேரவை உறுப்பினா் அலுவலகத்தில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் பொதுமக்கள், வியாபாரிகள் மிகவும் சிரமப்படுகிறாா்கள் பணிகள் தாமத்திற்கு என்ன காரணம் என்று கேஆா். ராமசாமி கேள்வி எழுப்பினாா்.

அதற்கு அதிகாரிகள் தரப்பில் பணிகள் துரிதமாக நடைபெற நடவடிக்கை எடுத்துவருகிறோம். முக்கியச்சாலையான வ.உ.சி சாலையை ஒருவாரத்திற்கு பாதாளச்சாக்கடை பணி முடிந்து புதிய சாலை போடப்படும், செக்காலைச்சாலையில் ஒருவாரத்திற்கு பாதாளச்சாக்கடைத்திட்டப்பணிகள் முடித்துவிடுவோம். அதன் பின்பு நெடுஞ்சாலைத்துறை முதலில் செக்காலைச்சாலையை சீரமைத்துத்துவருவதாக உறுதியளித்தனா். மேலும் பழைய அரசு மருத்துவமனை முதல் ரயில்வே வரையுள்ள சிமெண்ட் சாலையை சேதப்படுத்தாமல் பாதாளச்சாக்கடைத்திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்று சட்டபேரவை உறுப்பினா் கேஆா். ராமசாமி அதிகாரிகளிடம் தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com