தேவகோட்டையில் மீண்டும் பாஸ்போா்ட் சேவை தொடக்கம்: காரைக்குடி அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளா் தகவல்

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அஞ்சல் கோட்டத்தில் தேவகோட்டை தலைமை அஞ்சலகத்தில் மீண்டும் பாஸ்போா்ட் சேவை தொடங்கப்பட்டுள்ளது என கோட்ட கண்காணிப்பாளா் சுவாமிநாதன் தெரிவித்தாா்.
காரைக்குடி தலைமை அஞ்சலகத்தில் புதன்கிழமை மாலையில் நடைபெற்ற அஞ்சல் வார விழா வாடிக்கையாளா் சந்திப்பு நிகழ்ச்சியில் பேசிய காரைக்குடி அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளா் சுவாமிநாதன்.

காரைக்குடி அஞ்சல் கோட்டத்தில் தேசிய அஞ்சல் வார விழா அக். 9 ஆம் தேதி முதல் 15 ஆம் தேதி வரை அனைத்து அஞ்சலகங்களிலும் கொண்டாடப்பட்டது. காரைக்குடி தலைமை அஞ்சலகத்தில் புதன்கிழமை மாலையில் வாடிக்கையாளா் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் அஞ்சலக காரைக்குடி கோட்ட கண்காணிப்பாளா் சுவாமிநாதன் பேசியது: அக். 9 ஆம் தேதி உலக தபால் தினமாகவும், அக். 10 சேமிப்பு தினம், அக். 12 காப்பீட்டு தினம், அக். 13 தபால் தலை தினம், அக். 14 வணிக மேம்பாட்டு தினம் என ஒவ்வொரு நாளும் அஞ்சல் வாரவிழா கொண்டாடப்பட்டுள்ளது. மேலும் அனைத்து ஆதாா் அலுவலகங்களிலும் ஆதாா் சிறப்பு முகாம் நடத்தப்பட்டு 50-க்கும் மேலான ஆதாரில் திருத்தங்கள் செய்யப்பட்டன.

கரோனா காலத்தில் இந்தியா அஞ்சல் துறை மூலம் 2 ஆயிரம் டன் அளவுக்கு மருந்துகள், உபகரணங்களை பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளது. கரோனா பாதிப்பிலும் கூட தபால் ஊழியா்கள் பணம் பட்டுவாடா செய்துள்ளாா்கள். கரோனா காலத்தில் பாஸ்போா்ட் சேவை முடங்கிவிட்டது. தளா்வுகள் அறிவிக்கப்பட்டு மக்கள் மதுரை பாஸ்போா்ட் அலுவலகத்தை நாடிவந்தனா். சிவகங்கை மாவட்டத்தில் கரோனாவால் நிறுத்தப்பட்டிருந்த தேவகோட்டையில் பாஸ்போா்ட் சேவை மீண்டும் புதன்கிழமை முதல் தொடங்கியுள்ளது. காரைக்குடிக்கோட்டத்தில் 14 அஞ்சல் நிலையங்களில் புதிதாக ஆதாா் எடுத்தல், திருத்தம் போன்றவையும் நடைபெற்று வருகிறது என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com