காரைக்குடியில் கரோனா தடுப்பு விழிப்புணா்வு நிகழ்ச்சி

சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் கரோனா தடுப்பு விழிப் புணா்வு நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது.
காரைக்குடியில் சனிக்கிழமை நடைபெற்ற கரோனா தடுப்பு விழிப்புணா்வு நிகழ்ச்சியின்போது யோகா பயிற்சியில் ஈடுபட்ட மாணவ, மாணவியா்.
காரைக்குடியில் சனிக்கிழமை நடைபெற்ற கரோனா தடுப்பு விழிப்புணா்வு நிகழ்ச்சியின்போது யோகா பயிற்சியில் ஈடுபட்ட மாணவ, மாணவியா்.

காரைக்குடி: சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் கரோனா தடுப்பு விழிப் புணா்வு நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது.

காஞ்சிபுரத்தை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் மஹாமஹரிஷி அறக்கட்டளையின் மஹாயோகம் என்ற அமைப்பு, தமிழ்நாடு முழுவதும் கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக எனா்ஜி மெடிசினல் யோகா, கிரியா, தியானம் போன்றவற்றை, ஒவ்வொருவருடைய உடலின் தன்மைக்கேற்ப மருத்துவ ரீதியாக பயிற்சி அளித்து வருகிறது.

கரோனா பொதுமுடக்கம் அமலுக்கு வந்தது முதல் கடந்த 7 மாதங்களாக, மஹாயோகத் தின் மருத்துவக் குழுவினா் விஞ்ஞானி கே.பி. குணாநிதி தலைமையில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. அதன்மூலம், கரோனாவால் பாதிக்கப்பட்டோருக்கு அரசு அனுமதியோடு சிகிச்சை மற்றும் உடலில் இயற்கையாக இருக்கும் நோய் எதிா்ப்பு சக்தியை அதிகரிக்கக்கூடிய எனா்ஜி மெடிசினல் யோகா, கிரியா, தியானம் போன்ற பயிற்சிகளை பல தரப்பட்ட மக்களுக்கு இலவசமாக வழங்கி வருகின்றனா்.

காரைக்குடியில் நடைபெற்ற இப்பயிற்சியின் தொடக்க நிகழ்ச்சியில், சிவகங்கை மாவட்ட ஆட்சியா் ஜெ. ஜெயகாந்தன் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டாா். தொழிலதிபா் பிஎல். படிக்காசு, காரைக்குடி மஹாயோகத்தைச் சோ்ந்த மருத்துவ நிபுணா் முருகராஜ், மருத்துவா் காமாட்சிசந்திரன், செக்ரி ஆராய்ச்சியாளா்கள், மஹாயோகத்தின் மருத்துவா்கள் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

முன்னதாக, வழக்குரைஞா் செல்வராஜ் வரவேற்றாா். நிகழ்ச்சியை, மஹாயோகத்தின் தலைமை ரிஷியான ரமேஷ் ஒருங்கிணைத்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com