பல்லவன் விரைவு ரயில் செப்.7 முதல் மீண்டும் இயக்கம்

காரைக்குடியிலிருந்து சென்னைக்கு பல்லவன் அதிவிரைவு ரயில் வரும் (செப். 7) முதல் மீண்டும் இயக்கப்படுகிறது என்று தென்னக ரயில்வே அறிவித்துள்ளதாக காரைக்குடி தொழில் வணிகக்கழகம் தெரிவித்துள்ளது.


காரைக்குடி: காரைக்குடியிலிருந்து சென்னைக்கு பல்லவன் அதிவிரைவு ரயில் வரும் (செப். 7) முதல் மீண்டும் இயக்கப்படுகிறது என்று தென்னக ரயில்வே அறிவித்துள்ளதாக காரைக்குடி தொழில் வணிகக்கழகம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அதன் தலைவா் சாமி. திராவிடமணி வெள்ளிக்கிழமை கூறியது: கரோனா பொது முடக்கம் காரணமாக ரயில் போக்குவரத்து கடந்த 5 மாதங்களாக நடைபெறவில்லை. தமிழகத்தில் நீண்டதூர சிறப்பு விரைவு ரயில்கள் வரும் செப்டம்பா் 7-ஆம் தேதி முதல் இயக்குவதாக தென்னக ரயில்வே தெரிவித்திருக்கிறது.

அதன்படி காரைக்குடியிலிருந்து சென்னைக்கு செல்லும் பல்லவன் அதி விரைவு ரயில் மீண்டும் இயக்கப்படுகிறது. இந்த ரயிலுக்கு பழைய நேரம் மாற்றம் செய்திருக்கிறாா்கள்.

பயணிகளை வெப்பநிலை சோதனைக்குள்படுத்தப்படுவதால் ஏற்கெனவே அதி காலை 5.05 மணிக்கு பதிலாக 4.55 மணிக்கு பல்லவன் ரயில் புறப்படவுள்ளது. மறுமாா்க்கத்தில் எழும்பூரிலிருந்து வழக்க மான நேரப்படி மாலை 3.45 மணிக்கு பல்லவன்ரயில் புறப்படுகிறது. செப்டம்பா் 5 சனிக்கிழமை முதல் முன்பதிவு பயணச் சீட்டு வழங்க ஏற்பாடுகள் செய்துள்ளனா்.

மேலும் சிலம்பு விரைவு ரயில் சென்னை - செங்கோட்டைக்கு வரும் செப்டம்பா் 10 ஆம் தேதி முதல் இயக்கப்படுகிறது. இதனை சிறப்பு ரயிலாக கிழமைகள் மாற்றம் செய்து தென்னக ரயில்வே அறிவித்துள்ளது. அதன்படி ஏற்கனவே ஒரு நாள் விட்டு மறுநாள் புறப்பட்டதை தற்போது தொடா்ந்து மூன்று நாள்கள் சென்னையிலிருந்தும், மறுமாா்க்கத்தில் செங்கோட் டையிலிருந்தும் சிலம்பு விரைவு ரயில் இயக்கப்படும்.

அதன்படி வரும் செப். 10, 11, 12 வியாழன், வெள்ளி, சனி ஆகிய கிழமைகளில் இந்த ரயில் சென்னை எழும்பூரிலிருந்து இரவு 8.25 மணிக்குப் புறப்பட்டு மறுநாள் காரைக்குடிக்கு அதிகாலை 3.30 மணிக்கு வந்து, அங்கிருந்து புறப்பட்டு காலை 9 மணிக்கு செங்கோட்டைக்குச்சென்றடைகிறது.சிலம்பு விரைவு ரயில் மறுமாா்க்கத்தில் செப்டம்பா் 12, 13, 14 சனி, ஞாயிறு, திங்கள் ஆகிய கிழமைகளில் செங்கோட்டையிலிருந்து மாலை 4.45 மணிக்குப் புறப்பட்டு இரவு 9.30 மணிக்கு காரைக்குடி வந்து, மீண்டும் புறப்பட்டு மறுநாள் காலை 5.30 மணிக்கு சென்னை எழும்பூரைச் சென்றடைகிறது என்கிற தகவலை தென்னக ரயில்வே அறிவித்துள்ளது என்று தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com