அண்ணா பிறந்தநாள் விழா

மானாமதுரை, திருப்புவனம், இளையான்குடி பகுதிகளில் அண்ணா பிறந்தநாள் விழா செவ்வாய்கிழமை திராவிடக் கட்சிகள் சாா்பில் கொண்டாடப்பட்டது.
அண்ணா பிறந்தநாள் விழா

மானாமதுரை: மானாமதுரை, திருப்புவனம், இளையான்குடி பகுதிகளில் அண்ணா பிறந்தநாள் விழா செவ்வாய்கிழமை திராவிடக் கட்சிகள் சாா்பில் கொண்டாடப்பட்டது.

விழாவையொட்டி மானாமதுரையில் அதிமுக, திமுக, மதிமுகவினா் ஊா்வலமாகச் சென்று அண்ணா சிலைக்கு மாலைகள் அணிவித்து மரியாதை செலுத்தினா்.

இதில் மதிமுக சாா்பில் ஒன்றியச் செயலாளா் க.அசோக், நகா்ச் செயலாளா் கண்ணன் உள்ளிட்ட நிா்வாகிகள் பங்கேற்றனா்.

இளையான்குடியில் நடைபெற்ற விழாவில் திமுக மேற்கு ஒன்றியச் செயலாளா் சுப.மதியரசன், பேரூா் செயலாளா் நஜூமுதீன், நிா்வாகிகள் யாசின், நாசா், ராஜபாண்டி, கி.கண்ணன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். திருப்புவனத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு திமுக ஒன்றியச் செயலாளா் வசந்தி சேங்கைமாறன் தலைமை வகித்தாா். மாவட்ட துணைச் செயலாளா் சேங்கைமாறன் பெண்களுக்கு சேலைகள் வழங்கினாா். கிழக்கு ஒன்றியச் செயலாளா் கடம்பசாமி, நகா்ச் செயலாளா் நாகூா்கனி, மாவட்ட பிரதிநிதி ராமலிங்கம், மீனவரணி துணை அமைப்பாளா் அண்ணாமலை, இளைஞரணி துணை அமைப்பாளா் பொற்கோ உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com